மருத்துவமனைகளை டிஜிட்டல் மயமாக்க Zefo நிறுவனர்கள் விருப்பம்..!

இணையவழி இ-காமர்ஸ் நிறுவனமான quikr நிறுவனத்தை உறுவாக்கிய Zefo நிறுவனர்கள் தற்போது தனியார் மருத்துவமனைகளை டிஜிட்டல் மயமாக்க முயன்று வருகின்றனர். தரமான சேவை இணைய வழியிலேயே மருந்து பொருட்களை வாங்குதல், பணம் செலுத்துதல் போன்றவற்றை எளிமையாக்க திட்டமிட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஆயுஷ் ஹெல்த் என்ற நிறுவனம் கரண் குப்தா, ஹிமேஷ் ஜோஷி, அரிஜித் குப்தா ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் கீழ் தற்போது 20 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளை மேலும் மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி சென்னை, ஐதராபாத், நொய்டா, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களிலும் மருத்துவ சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளனர். இதற்காக சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து இவர்கள் 6.5 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளனர்.

இதனுடன் மருத்துவ காப்பீடு, ஆலோசனை உள்ளிட்ட பல சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஆயுஷ் ஹெல்த் நிறுவனத்தில் 1,200 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இவற்றை 9,000 படுக்கைகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே 2 மருத்துவமனைகளுடன் சேவையை தொடங்கிய இவர்கள் கொரோனா தொற்றின் போது தனது மருத்துவமனைகளை 20 ஆக உயர்த்தினர்.

மருத்துவ உலகை டிஜிட்டல் மயமாக்க உள்ளனர். இதன் மூலம் வீட்டில் இருந்தப்படியே நாம் மருத்துவரை தொடர்பு கொள்ள முடியும், ஆலோசனை பெற முடியும். மருந்து பொருட்களை ஆன்லைனிலேயே பெற்றுகொள்ள முடியும். மருத்துவ காப்பீடும் ஆன்லைனிலேயே பதிவு செய்ய முடியும்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் நேரடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு மருத்துவம் பார்க்க முடியும். மேலும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் தரமான சிகிச்சையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என ஆயுஷ் ஹெல்த் நினைக்கிறது. இது சாத்தியமானால் மருத்துவமனைகளுக்கு சென்றுவரும் அலைச்சல் குறையும், செலவு மிச்சமாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.