உலகளவில் வலிமையான விமானப்படை.. சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..

உலக அளவில் வலிமையான விமானப்படை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. உலக அளவிலான தரவரிசை பட்டியலில் ஆறாவது இடத்தை இந்திய விமானப்படை பிடித்துள்ளது.

தி வோர்ல்ட் டேரக்டரி ஆஃப் மார்டன் மிலிட்டரி ஏர்ஃகிராப்ட் (WDMMA) என்ற நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலக அளவில் வலிமையான இராணுவ பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி வலிமையான விமானப்படையில் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்த படியாக இந்திய விமானப்படை மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலக தரவரிசை பட்டியலில் சீன விமானப்படை, ஜப்பான் வான் தற்காப்பு படை, இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பிரான்ஸ் வான் மற்றும் விண்வெளிப்படை ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி இந்திய விமானப்படை ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. WDMMA உலகளாவிய நவீன இராணுவ விமான சேவைகளின் தற்போதைய பலம் மற்றும் பலவீனங்கள் தொடர்பான அறிக்கையை வழங்கும் நிறுவனம் ஆகும்.

WDMMA 98 நாடுகளையும், 124 விமான சேவைகளையும் என மொத்தம் 47,840 விமானங்களை பின்தொடர்கிறது. WDMMA, ஒட்டு மொத்த வலிமை மற்றும் நவீனமயமாக்கல், தளவாட ஆதரவு, தாக்குதல் மற்றும் பாதுகாப்பு திறன்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் புள்ளிகளை வழங்குகிறது.

ஒரு நாட்டின் இராணுவ வான் சக்தியானது அதன் மொத்த விமானங்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல் அதன் தரம் மற்றம் அவற்றின் பரந்த கலவையின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் உலகின் வலிமை வாய்ந்த விமானப்படையாக அமெரிக்க விமானப்படை உள்ளது.

Also Read: 1000 கோடி மதிப்பில் எதிரி இலக்கை கண்டறியும் ஸ்வாதி ரேடாரை வாங்க உள்ள இந்திய இராணுவம்..?

அமெரிக்க விமானப்படை(5,091) 242.9 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அமெரிக்க கடற்படை(2,626) 142.4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ரஷ்ய விமானப்படை(3,829) 114.2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், அமெரிக்க இராணுவம்(4,328) 112.6 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், அமெரிக்க கடற்படை(1,211) 85.3 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

Also Read: அணுசக்தியில் இயங்கும் புதியவகை தாக்குதல் நீர்மூழ்கிகப்பலை வடிவமைத்த சீனா..!

இந்திய விமானப்படை 1,625 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பயிற்சி மற்றும் சரக்கு விமானங்களுடன் 69.4 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. சீன விமானப்படை(2,040) 63.8 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தையும், ஜப்பான் விமானப்படை(779) 58.1 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையும், இஸ்ரேல் விமானப்படை(581) 58.0 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தையும், பிரான்ஸ் விமானப்படை(658) 56.3 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

Also Read: Su-30MKI விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிரம்மோஸ்..!

Leave a Reply

Your email address will not be published.