இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி! உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
இந்திய மருந்து ஒழுங்குபடுத்தும் அமைப்பு DCGI இன்று ஆக்ஸ்ஃபோர்ட் , சீரம் நிறுவனம் தயாரித்த கோவிசீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்திற்கும் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் முடிவை வரவேற்ற உலக சுகாதார அமைப்பு (WHO) “தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் COVID-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தவும் பலப்படுத்தவும்” இது உதவும் என்று கூறியுள்ளது.
தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் COVID-19 தடுப்பூசிக்கு வழங்கப்பட்ட முதல் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை WHO வரவேற்கிறது. இன்று இந்தியா எடுத்த இந்த முடிவு, ஆசிய பிராந்தியத்தில் COVID-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவும். இந்த தடுப்பூசியின் பயன்பாடு பிற பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் COVID-19 இன் தாக்கத்தை குறைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) COVID-19 பொருள் நிபுணர் குழு (SEC) சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் வழங்கியது. “போதுமான ஆய்வுக்குப் பிறகு, நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள CDSCO முடிவு செய்துள்ளது, அதன்படி, அவசர நிலைகளில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்கு சீரம் மற்றும் பாரத் பயோடெக் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது”, என்று டிசிஜிஐ டாக்டர் வி.ஜி. சோமானி புதுதில்லியில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் அகமதாபாத்தை சேர்ந்த Cadila Healthcare நிறுவனம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக சோமானி கூறினார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா, அஸ்ட்ராசெனேகாவுடன்(AstraZeneca) இணைந்து கோவிஷீல்டை உற்பத்தி செய்துள்ளது. மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து “கோவாக்சின்” தடுப்பூசியை உள்நாட்டிலேயே உருவாக்கின.
பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மருந்துகட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) அவர்களின் COVID-19 தடுப்பூசிகளுக்கு சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றுக்கு அவசர பயன்பாட்டு அனுமதியை வழங்கினார்.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா CEO அதர் பூனாவாலா தனது டுவீட்டில், “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! அனைத்து அபாயங்களையும் கடந்து இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது, இந்தியாவின் முதல் COVID-19 தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என தெரிவித்தார்