இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு விரைவில் அனுமதி..?

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த பாரத் நிறுவனம் ஐநா சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்த நிலையில் தடுப்பூசி பற்றிய மேலும் சில தரவுகளை ஐநா கேட்டுள்ளது.

அடுத்த வாரம் நடைபெற உள்ள ஐநா சுகாதார அமைப்பு கூட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு (EUL) அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் EUL கீழ் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பிடம் தரவினை சமர்பித்தது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு செவ்வாய் அன்று தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான இறுதி மதிப்பீட்டை நடத்துவதற்கு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் விளக்கங்களை கேட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கேட்ட தகவலை பாரத் பயோடெக் நிறுவனம் சமர்பித்து வருகிறது.

அடுத்த வாரம் 3 ஆம் தேதி மீண்டும் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் குழு கூட உள்ளது. அந்த கூட்டத்தில் EUL கீழ் தடுப்பூசியை அனுமதிப்பதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதுவரை WHO ஃபைசர், அஸ்ட்ராஜெனிகாவின் கோவிஷீல்டு, ஜான்சன் Amp ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா, சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை.. பிரதமர் மோடி, WHO பாராட்டு..

WHO உதவி இயக்குனர் மரியங்கெலா சிமாவோ கூறுகையில், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கிறோம். சமர்பிக்க வேண்டிய கூடுதல் தரவு பற்றி தெளிவுபடுத்தி உள்ளோம். தினந்தோறும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிமாவோ தெரிவித்தார்.

இந்தியா பல்வேறு வகையான உயர்தர தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. நாங்கள் இந்திய தடுப்பூசிகளை நம்புகிறோம். அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என அவர் கூறினார். மேலும் சீனாவின் சீனோஃபார்ம் மற்று சினோவாக் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு எவ்வித தரவும் கேட்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சீனாவுக்கு எதிராக சோலார் பேட்டரி சந்தையில் களமிறங்க உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்..

Also Read: தரமான உள்கட்டமைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை.. 100 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..

Leave a Reply

Your email address will not be published.