உலக புகழ் பெற்ற பச்சை கண்களை உடைய ஆப்கன் பெண்.. இத்தாலியில் இருப்பதாக தகவல்..

நேஷ்னல் ஜியோகிராஃபிக் பத்திரிக்கையின் முகபக்கத்தில் இடம்பெற்றிருந்த புகழ் பெற்ற பச்சை கண்களை கொண்ட ஆப்கன் பெண் ஷர்பத் குலா இத்தாலியில் உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற ஷர்பத் குலா உள்ளிட்ட மக்கள் உதவி கேட்டதை தொடர்ந்து இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளின் அரசுகள் தலையிட்டு வேளியேற உதவி கேட்டவர்களை அழைத்து கொண்டு நாடு திரும்பியது.

அதில் உலக புகழ்பெற்ற பச்சை கண்களை உடைய ஆப்கன் பெண் ஷர்பத் குலா நாட்டை விட்டு வெளியேற உதவி கேட்டதை அடுத்து அவரை வெளியேற்ற இத்தாலி உதவி செய்ததாக இத்தாலி பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இத்தாலி ஷர்பத் குலாவுக்கு பாதுகாப்பான புகலிடத்தை அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த 1984 ஆம் ஆண்டு ஷர்பத் குலா பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாமில் வசித்தப்போது அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்டீவ் மெக்கரியால் புகைப்படம் எடுக்கப்பட்டார். ஆச்சரியமூட்டும் பச்சை கண்கள், மூர்க்கத்தனம் மற்றும் வலியுடன் கூடிய மனதுடன் அவர் வெளியே எட்டிப்பார்த்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரல் ஆனது.

ஆனால் அதன்பிறகு 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி இருந்ததால் ஷர்பத் குலா என்ன ஆனார் என தெரியவில்லை. அப்போது ஆப்கனில் தாலிபான் ஆட்சியின் கீழ், பெண்கள் வேலைக்கு செல்வது, பள்ளிக்கு செல்வது தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினால் ஆண் துணை இல்லாமல் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

Also Read: பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?

அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர் மெக்கரியால் மீண்டும் அவர் ஆப்கனில் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் ஷர்பத் குலா 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்தார். அங்கு வசிப்பதற்காக போலியான அடையாள அட்டையை தயாரித்ததாக அவர் ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.

இதனை கேள்விபட்ட ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி, உலக புகழ்பெற்ற குலாவை ஜனாதிபதி மாளிகைக்கு வரவைக்கப்பட்டு வரவேற்பு அளித்தார். பின்னர் அவருக்கு என்று அரசு சார்பில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடும், வீட்டிற்கான சாவி குலாவின் கையில் கொடுக்கப்பட்டது.

Also Read: அமெரிக்க ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்கும் தாலிபான்.. இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு..

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான் ஆட்சியை பிடித்ததால், பலர் நாட்டை விட்டு வெளியேற உதவி கேட்டனர். அப்போது பல நாடுகள் ஒருங்கிணைத்து வெளியேறும் நபர்களை விமானத்தில் அழைத்து வந்தனர். அதில் ஷர்பத் குலாவும் ஒருவர். உலக புகழ் பெற்ற பெண் தனது உயிரை காப்பாற்றி கொள்ள வேறொரு நாட்டில் அகதியாக தஞ்சம் அடைந்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: குடும்பத்தை வாழ வைக்க 9 வயது மகளை விற்பனை செய்த தந்தை.. ஆப்கனில் அதிர்ச்சி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *