அத்தியாவசிய தேவைகளுக்காக இலங்கைக்கு 700 Mn டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்..?

நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு 700 மில்லியன் டாலரை வழங்க உலக வங்கி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தற்காலிகமாக இலங்கை அதன் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவும்.

இலங்கை தற்போது திவால் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் சமையல் எரிவாயு ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் உலக வங்கியின் நாட்டு முகாமையாளர் சியோ காந்தா கடந்த வாரம் இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்து, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலிட்டு வங்கி (AIIB) மற்றும் ஐ.நா அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்கனவே உறுதியளித்த திட்டங்களை விரைவுப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடை நாடுகள் மூலம் நீண்ட கால உதவி கிடைக்கும் வரை உலக வங்கி இலங்கைக்கு உதவி செய்யுமாறு அமைச்சர் பீரிஸ் உலக வங்கியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் கடன் வழங்க முன்வந்துள்ளது.

Also Read: பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்ய இந்தியா ரஷ்யா இடையே ஒப்புதல்..?

சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதிகரித்து வரும் சமூக பதட்டங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் வாஷிங்கடனில் இலங்கை மற்றும் IMF இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Also Read: பொருளாதார நெருக்கடி: இலங்கைக்கு மேலும் கடன் வழங்க சீனா ஒப்புதல்..?

இந்த கூட்டத்தில் IMF இலங்கைக்கு 300 மில்லியன் டாலர் முதல் 600 மில்லியன் டாலர் வரை உதவுவதாக உறுதி அளித்தது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடந்த ஏப்ரல் 12 அன்று இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்துவதை நிறுத்தி வைத்தது. 1948ல் விடுதலை பெற்றதில் இருந்து தற்போது இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Also Read: 10 மாதங்களில் 14 பில்லியன் டாலர் கடன் வாங்கிய பாகிஸ்தான்.. உலக வங்கி அறிக்கை..

Leave a Reply

Your email address will not be published.