நாகலாந்தில் மாவோயிஸ்டுகள் என தவறாக நினைத்து தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. 14 பேர் பலி..

நாகலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை பொதுமக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாகலாந்து மாநிலத்தின் கோன் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சிலர் பணியை முடித்து விட்டு வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட அமைப்பான NSCN (K) யின் யூங் ஆன் பிரிவை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் என தவறாக நினைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நடந்த கலவரத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இது குறித்து இராணுவம் தரப்பில், உயிர் இழப்பு துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்கமாக பணியை முடித்து வீடு திரும்பி இருக்க வேண்டியவர்கள் இன்னும் திரும்பாததால் அந்த கிராமத்தில் உள்ள நபர்கள் அவர்களை தேடி சென்றுள்ளனர். அப்போது அங்கு வேனில் சடலத்தை கண்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, டெல்லியில் இருந்து உடனடியாக நாகலாந்து திரும்பினார். அவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்திப்பதற்காக டெல்லி சென்று இருந்தார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கேள்விபட்டவுடன் உடனே நாகலாந்து திரும்பினார்.

Also Read: விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லும் வழியில் மிராஜ் போர் விமானத்தின் டயரை திருடிய மர்மநபர்கள்..

நாகலாந்து முதல்வர் கூறுகையில், இது மிகவும் கண்டிக்கத்தக்கது, இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். பொதுமக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நாகலாந்து ஆளுநர் ஜெகதீஷ் முகி கூறுகையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Also Read: திபெத் எல்லை அருகே ஹெலிகாப்டர் தளங்களை அமைத்துவரும் சீனா.. சாட்டிலைட் புகைப்படம் வெளியானது.

மேலும் சம்மந்தப்பட்ட இராணுவ வீரர்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து குடிமக்களும் அமைதிகாக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பக்கத்து மாநிலமான மணிப்பூரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் பிரிவின் கட்டளை அதிகாரி திரிபாதி, அவரது மனைவி, 7 வயது மகன் உட்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையின் போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

Also Read: பாகிஸ்தானில் இலங்கை நபரை கொன்று உடலை எரித்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு..

Leave a Reply

Your email address will not be published.