பாகிஸ்தானின் F-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பதவி உயர்வு..
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை குருப் கேப்டனாக பதவி உயர்வு அளித்துள்ளது இந்திய விமானப்படை.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 CRPF வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதனை தொடர்ந்து பிப்ரவரி 26 ஆம் தேதி இந்திய விமானப்படை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து பிப்ரவரி 27 அஇம் தேதி பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைய முயன்ற போது இந்திய வீரர்கள் விங் கமாண்டர் அபிநந்தன் உட்பட இந்திய விமானங்கள் பாகிஸ்தான் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் விங் கமாண்டர் அபிநந்தனின் மிக்-21 போர் விமானம் மூலம் பாகிஸ்தானின் F-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பின்னர் அபிநந்தனின் விமானமும் பாகிஸ்தானால் சுடப்பட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அபிநந்தனை சிறை பிடித்தது.
Also Read: அபியாஸ் அதிவேக வான்வழி விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..
சர்வதேச அழுத்தத்திற்கு பின் விங் கமாண்டர் அபிநந்தன் 48 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்பட்டார். பின்னர் கண்ணில் ஏற்பட்ட காயத்தினால் சிறிது ஓய்வுக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்பினார். இந்த புதன்கிழமை விங் கமாண்டர் அபிநந்தன் குருப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.
Also Read: இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது: அமெரிக்கா அறிக்கை
இந்த பதவி இந்திய இராணுவத்தில் கர்னல் பதவிக்கு சமமாகும். விரைவில் அவர் புதிய பணியை தொடர உள்ளார். மேலும் F-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஒரே மிக்-21 பைலட் என்ற பெருமையும் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு..