ரஷ்யா உக்ரைன் போர் தொடருமா? முடிவுக்கு வருமா? பிரதமர் மோடியின் உதவியை கேட்கும் உலக நாடுகள்..

ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி சமாதானம் முயற்சி மேற்கொண்டால் இந்த போர் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லோரும் எதிர்பார்த்ததை போலவே உக்ரைன் மீது இன்று அதிகாலை 5 மணியளவில் ரஷ்யா ராணுவ தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் நாட்டை அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் சேர்க்க கூடாது என்றும், போலந்து, ரூமேனியா போன்ற நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகளையும், நேட்டோ படைகளையும் அகற்றிட வேண்டும் எனவும் ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையுமேயானால் நேட்டோ படைகள் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு மிக அருகாமையில் நிறுத்தப்படும் சூழல் ஏற்படும். அது ரஷ்யா நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக இருக்கும். எனவேதான் உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதை அனுமதிக்க முடியாது என புடின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

உக்ரைனை சேர்ப்பது ரஷ்யா மீதான யுத்த முஸ்தீபு என்பதால் தான் 2 லட்சத்திற்கு மேலான ரஷ்ய படைகளை உக்ரைன் எல்லை பகுதியில் புடின் நிறுத்தி இருக்கிறார். முதல் மற்றும் இரண்டாம் உலக போரின் மையமாக விளங்கிய ஐரோப்பாவில் இன்னொரு யுத்தத்திற்கு வழி காட்டும் நேட்டோ அமைப்பு அவசியமற்றது. எனவே புட்டினிடம் இருந்து இந்த கோரிக்கை எழுந்த போதே உக்ரைன் நேட்டோ அமைப்பிற்குள் சேர்க்கப்படாது என்ற உறுதியையும், அதற்கு முன்னோடியாக போலந்து, ருமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏவுகணைகள் அகற்றப்படும் என அமெரிக்கா அறிவித்து இருந்தால் இந்த யுத்தத்தை தடுத்திருக்கலாம்.

எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் எதற்கோ காலம் தாழ்த்துகின்றன என்பதை உணர்ந்த புதின் இன்று உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளார். இந்த போர் சாதாரண மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இராணுவ, விமான தளங்கள் மீதானது என அறிவித்து இருக்கிறார். உக்ரைன் நாட்டை பிடிப்பதல்ல, உக்ரைன் நாட்டை நேட்டோ படைகள் ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதே புதினின் எண்ணமாக இருக்க கூடும்.

உலகத்தில் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் இப்பொழுது நேட்டோ அமைப்பின் அவசியம் என்ன? அமெரிக்காவோ மற்ற நாடுகளோ உலக மக்களுக்கு அறிவிக்கவில்லை. ஆனால் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது என குற்றம் சுமத்தப்படுகிறது. எப்படியோ அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய போர் பசிக்கு உக்ரைனை பயன்படுத்தி கொண்டனர்.

கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லை பகுதியில் குவிக்கப்பட்ட பொழுதே ரஷ்யா மற்றும் நேட்டோ நாடுகளை அழைத்து ஐ.நா போர் பதட்டத்தை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஐ.நாவும் அமெரிக்காவின் இன்னொரு குரலாகவே இருக்கின்ற சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டதால் ஐ.நாவும் தனது பங்கை முழுமையாக ஆற்ற தவறிவிட்டது.

ஆனால் உலகத்தில் ‘STALWARTS’ என்று அழைக்கப்படகூடிய பரந்த சிந்தனையோடு செயல்படக்கூடிய உலக அளவிலான தலைவர்கள் எந்த நாட்டிலும் இல்லாததால் இது போன்ற உலக மாந்தர்களுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. போர் துவங்கி விட்டால், குறிப்பிட்ட கால கட்டம் வரையிலும் தான் போர் அந்த நாட்டின் தலைவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

அதன் பிறகு அனைவரின் கையையும் மீறி போய்விடும். போரை எந்த நாட்டு மக்களும் விரும்ப மாட்டார்கள். எல்லா மக்களும் அமைதியையே விரும்புவார்கள். போருக்கான காரணிகளை ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உண்டான பாணியில் நியாப்படுத்துவார்கள். இப்பொழுது மிக ஆபத்தான சூழல் உருவாகி இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே பிரென்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஃப்ராங் வாட்லர் என பலரும் நேரடியாக பேசிவிட்டார்கள். அமெரிக்கா, பிரிட்டன் அதிபர்களின் அழைப்புகளுக்கு புதின் மதிப்பு கொடுக்கும் காலமும் முடிந்து விட்டது. இனி சீனாவின் அதிபர் ஜி ஜீன்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே பேசுவதற்கான வாய்ப்பும், அதை காது கொடுத்து புதின் கேட்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

சீன அதிபரை காட்டிலும் பிரதமர் மோடி அவர்கள் இந்த பிரச்சனையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டால் புதின் தனது படைகளை வாபஸ் வாங்கி கொள்ளவோ, ஜோ பிடன் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோ ஏவுகணைகளையும் படைகளையும் விலக்கி கொள்ளவும், உக்ரைனை நேட்டோவில் சேர்க்கும் முயற்சியும் கைவிடப்படலாம்.

சண்டை தொடருமா அல்லது சமாதானம் ஏற்படுமா என ஓரிரு நாட்களில் தெரிந்த விடும். சர்வதேச அமைதியை கணக்கிலே கொண்டு பாரத பிரதமர் மோடி அவர்கள் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நிறுத்த முயற்சியை மேற்கொள்வது அவரது மதிப்பையும், இந்தியாவின் மதிப்பையும் சர்வதேச அளவில் உயர்த்தும் வாய்ப்பு உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம் என டாக்டர் க.கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.