கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த மனைவி, 16 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது

சிதம்பரம் அருகே வேலங்கிராயன்பேட்டை கிராமத்தில் கடந்த 30ந் தேதி சடலம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற போலிசார் சடலத்தை கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இவர் பெரியநற்குணம் கிராமத்தை சேர்ந்த மினிவேன் ஓட்டுனரான ஆசை என்கிற சத்யராஜ் என தெரியவந்தது. மேலும் அவரது மனைவி தீபா தனது கணவரை 17ஆம் தேதி முதல் காணவில்லை என சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

போலிசாரின் விசாரணையில் கணவர் சத்தியராஜை அவரது மனைவியே காதலன் ஐயப்பனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

சத்தியராஜும், ஐயப்பனும் நண்பர்கள் என்பதால் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் ஐயப்பனுக்கும் சத்யராஜ் மனைவி தீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமானதை அறிந்த சத்யராஜ் இருவரையும் எச்சரித்துள்ளார். இதனால் தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் சத்தியராஜை தீபா ஐயப்பன் ஆகிய இருவரும் கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.

அதன்படி 17ஆம் தேதி சாத்தமங்கலம் மதுக்கடைக்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துள்ளனர். போதையில் தள்ளாடிய சத்தியராஜை அருகிலுள்ள வாழை தோப்புக்குள் அழைத்து சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்து சடலத்தை பரங்கிப்பேட்டை அருகே உள்ள வேலங்கிராயப்பேட்டை கடற்கரைக்கு எடுத்து வந்து மணலில் புதைத்து உள்ளனர்.

பின்னர் கடற்கரையில் சடலத்தின் கைகள் வெளியே தெரிந்ததால் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்பு போலிசார் நடத்திய விசாரணையில் தீபா, காதலன் ஐயப்பன் கூலிப்படையை சேர்ந்த வினோத், அருண் , கார்த்தி, விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரையும் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *