2வது திருமணம் செய்ய போகிறேன், இஷ்டம் இருந்தால் இரு, இல்லையென்றால் சென்று விடு.. கணவனை வெட்டி கொன்ற மனைவி
கோவில்பட்டியை சேர்ந்த பிரபு(38) மற்றும் அவரது மனைவி உமாமகேஸ்வரி (32), இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு குடித்துவிட்டு தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவர, அவரது செல்போனில் இருக்கும் ஒரு பெண்ணின் போட்டோவை பார்த்து அவர் யாரென்று பிரபுவிடம் கேட்டுள்ளார்.
இருவருக்கும் இருந்த தொடர்பால் அவள் கர்ப்பமாகி விட்டதாகவும், அவளை கைவிட முடியாது என பிரபு கூறியுள்ளார்.
மேலும் அவளை இரண்டாவதாக திருமணம் செய்யப் போகிறேன், இஷ்டம் இருந்தால் என்னுடன் இரு, இல்லையென்றால்
சென்றுவிடு எனக் கூறியுள்ளார். இதனால் கோவடைந்த உமா மகேஸ்வரி பிரபுவை அரிவாளால் வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிரிழந்தார். பின்பு கோவில்பட்டி காவல் நிலையத்தில் உமா மகேஸ்வரி சரண் அடைந்தார். இதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.