குஜராத்தில் பிரதமர் மோடியுடன் WHO தலைவர் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் இன்று சந்திப்பு..!

பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை முதல் 3 நாள் பயணமாக குஜராத் செல்கிறார். அங்கு அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி உடன் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத்தும் கலந்து கொள்கிறார்.

இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி, காந்தி நகர், பனஸ்கந்தா, ஜாம்நகர் மற்றும் தாஹோத் ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இன்று வித்யா சமிக்‌ஷா கேந்திராவிற்கு சென்று கல்வி துறையுடன் தொடர்புடைய நிபுணர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் ஏப்ரல் 19 அன்று பனஸ்கந்தாவில் புதிய பனாஸ் பால் வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை திறந்து வைக்கிறார்.

இதுதவிர உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரேயஸும் இன்று முதல் மூன்று நாள் பயணமாக குஜராத் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். டெட்ரோஸ் கெப்ரேயஸ் இன்று ராஜ்கோட்டை அடைவார் செவ்வாய் அன்று WHO பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தின் (GCTM) அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து அடிக்கல் நாட்டுகிறார்.

உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய மருத்துவத்திற்கான முதல் மற்றும் ஒரே உலகளாவிய அவுட்போஸ்ட் மையமாக இந்த GCTM இருக்கும். புதன் அன்று மூன்று நாள் உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் உச்சி மாநாட்டை டெட்ரோஸ் கெப்ரேயஸ் கூட்டாக தொடங்கி வைக்கிறார். இந்த உச்சி மாநாட்டில் சுமார் 90 புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் 100 கண்காட்சியாளர்கள் இருப்பார்கள்.

Also Read: ரஷ்யா உடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து..?உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு..

இதுதவிர மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், எட்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். அதிகாலை 1.20 மணியளவில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தாக மகாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது. பிரவிந்த் குமார் ஜுக்நாதை வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் மாநில நெறிமுறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

Also Read: ஆப்கானிஸ்தானுக்குள் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.. எச்சரித்த தாலிபான்..

நாளை குஜராத் செல்லும் பிரவிந்த் குமார் ஜுக்நாத், ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். மேலும் ஏப்ரல் 20 அன்று உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரவிந்த் குமார் ஜுக்நாத் எட்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி கோபிதா ஜுக்நாத் மற்றும் உயர்மட்ட குழுவும் வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.