இந்தியாவின் அடுத்த CDS யார்..? இராணுவ தளபதி எம்எம் நரவனேவா அல்லது விஆர் சவுதாரியா..?

தமிழகத்தின் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து அந்த பதவிக்கு அடுத்து யார் நியமிக்கப்பட உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்தியில் ஆலோசனை கூட்டம் நடந்து வருவதாகவும் இன்னும் ஒரு சில தினங்களில் யார் அடுத்த CDS என அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

CDS என்பது நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அதிஉயர்ந்த முக்கியமான பதவி ஆகும். அந்த பதவியை நீண்ட நாட்களாக யாரையும் நியமிக்காமல் வைத்திருக்க முடியாது. அதனால் அடுத்த CDS யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மோடி அரசாங்கத்தால் இராணுவ கட்டமைப்பை மறுசீரமைத்த பிறகு இந்த CDS பதவி உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் CDS ஆக ஜெனரல் பிபின் ராவத் பதவி ஏற்றார். பிபின் ராவத் 2016 ஆம் ஆண்டு இந்திய இராணுவ தளபதியாக பதவி ஏற்றார். பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ஆலோசனை படி பிபின் ராவத் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் முப்படைகளை இணைத்து 2019 ஆம் ஆண்டு CDS பதவி உருவாக்கப்பட்டது.

பிபின் ராவத் ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை முப்படைகளின் தளபதியாக CDS பதவியில் அமர்த்தியது மோடி அரசு. பிபின் ராவத் இந்த பதவியில் 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். அதாவது ஆடுத்த ஆண்டுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். தற்போது தேர்ந்தெடுக்கப்பட உள்ள CDS அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் மற்றும் சீனாவை சமாளிக்க கூடிய, இந்திய இராணுவத்தை நவீனப்படுத்த கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.

CDS பதவி நியமனத்திற்கு சில அடிப்படை விதிகள் உள்ளன. அதில் அடுத்த CDS ஆக வருபவர்கள் நான்கு ஸ்டார் உடையவராக இருக்க வேண்டும். அல்லது நான்கு ஸ்டாருக்கு தகுதி பெற கூடிய மூன்று உடையவர்களாகவும் இருக்கலாம். அவர் 65 வயதிற்கு மேல் இருக்க கூடாது. இந்திய இராணுவத்தின் வடக்கு கட்டளை தளத்தின் மூத்த ஜெனரல் ஒய்.கே. யோஷி நான்கு ஸ்டார் தரநிலையில் உள்ளார். அதை தவிர்த்து தற்போது நான்கு ஸ்டார் தர்நிலைக்கு ஏற்ற தளபதிகள் என்றால் அதில் தற்போது உள்ள இராணுவ தளபதி எம்எம் நரவனே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் உள்ளனர்.

ஆனால் பெரும்பாலும் முப்படை தளபதிகளே CDS ஆக தேந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில் 2019 ஆம் ஆண்டு பிபின் ராவத் இராணுவ தளபதி பதவியில் இருந்து CDS பதவிக்கு உயர்த்தப்பட்டதால் அந்த பதவிக்கு எம்எம் நரவனே 2019 ஆம் ஆண்டு முதல் இராணுவ தளபதியாக இருந்து வருகிறார். ஆனால் ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி அந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிதான் விமானப்படை தளபதியாக பதவி ஏற்றார். அதேபோல் அட்மிரல் ஆர் ஹரி குமார் நவம்பர் 30 ஆம் தேதி கடற்படை தளபதியாக பதவி ஏற்றார்.

Also Read: தைவான் அருகே சீன நீர்மூழ்கி கப்பலை தாக்கிய அமெரிக்கா.. தென்சீனக்கடலில் பரபரப்பு..

இதன் அடிப்படையில் நீண்ட அனுபவம் கொண்ட எம் எம் நரவனே அடுத்த CDS ஆக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் அதனை உறுதிபடுத்தும் வகையில் பிபின் ராவத் விபத்தில் சிக்கிய உயிரிழந்த புதன் கிழமை அன்று இரவே CDS பிபின் ராவத் கவனித்து வந்த நான்கு பதவிகளில் ஒன்று எம்எம் நரவனேவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read: உயிரியல் போருக்கு தயாராக வேண்டும்.. BIMSTEC மாநாட்டில் பிபின் ராவத் எச்சரிக்கை..

இதன் அடிப்படையில் அடுத்த CDS ஆக எம் எம் நரவனே வருவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மூத்த அதிகாரிகள் அல்லது நீண்ட நாட்கள் பதவியில் இருப்பவர்கள் தான் அடுத்த CDS என்று இல்லை. பிபின் ராவத் CDS ஆக பதவி ஏற்றபோது அவரை விட மூத்த அதிகாரிகள் இரண்டு பேர் இருந்தனர். ஆனால் பிபின் ராவத் இராணுவ தளபதியாக செயல்பட்ட விதம் மற்றும் அனுபவத்தின் மூலமாகவே CDS ஆக நியமிக்கப்பட்டார். அதனால் எம் எம் நரவனே தான் அடுத்த CDS என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் தற்போது பார்க்கும் போது அவர் வருவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

Also Read: ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் சீனாவா..? பிரம்மா செலன்னேவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனாவின் குளோபல் டைம்ஸ்..

Leave a Reply

Your email address will not be published.