5ஆம் தலைமுறை தேஜஸ் MK 2 போர் விமானத்திற்கு ஆர்டர் கொடுத்த இந்திய விமானப்படை?

இந்திய விமானப்படை தேஜஸ் மார்க் 2 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான ஆர்டரை HAL நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. தேஜாஸ் MK II திட்டத்தின் வடிவமைப்பு குழு முக்கியமான விரிவான வடிவமைப்பு மதிப்பாய்வை (CDR) சமர்பித்துள்ளது.

தேஜாஸ் மார்க் 2 திட்டத்தின் வடிவமைப்பு மதிப்பாய்வை (CDR), இந்திய விமானப்படையின் துணைத்தலைவர் (DCAS) ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி நவம்பர் 15 அன்று ஏற்றுக்கொண்டார். அதனை அடுத்து HAL நிறுவனத்திற்கு இந்திய விமானப்படை 123 ஐந்தாம் தலைமுறை தேஜாஸ் மார்க் 2 போர் விமானத்திற்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

CDR என்பது பல துறைகள் மற்றும் தொழிற்நுட்ப மதிப்பாய்வு ஆகும். இது ஒரு விமானத்தை வடிவமைப்பதில் முக்கிய படியாக இருக்கும். விமானம் தயாரிப்பதற்கும் சோதனை செய்வதற்கும் தயாராக உள்ளதா என்பதை ஆராய்ய இந்த CDR முக்கியமானதாகும்.

HAL நிறுவனம் முன் மாதிரி தேஜஸ் மார்க் 2 விமானத்தை தயாரிக்க உள்ள நிலையில் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி மற்றும் DRDO இந்த முழு திட்டத்தையும் கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு வருட சோதனைக்கு பிறகு முதல் முன்மாதிரி சோதனை விமானம் 2023 இறுதிக்குள் முடிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் அந்த முன் மாதிரி சோதனை விமானத்தை 2023ல் நடக்கும் ஏரோ இந்தியாவில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர தேஜாஸ் மார்க் 2 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வாங்க ராயல் மலேசியன் விமானப்படையும் ஆர்வம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் AESA ரேடார், அகச்சிவப்பு தேடல் மற்றும் தடம் அமைப்பு, இரவு பார்வை கண்ணாடி காக்பிட், பரந்த பகுதி காட்சி மற்றும் பரந்த கோண ஹாலோகிராபிக் ஹெட்-அப் டிஸ்பிளே (HUD) அமைப்பு, ஹேண்ட்ஸ்-ஆன் த்ரோட்ஸ்-அண்ட்-ஸ்டிக் (HOTAS), எதிரி நாட்டு விமானங்களில் சிக்காதவாறு இருக்க ஜாமர்கள் ஆகியவை இருக்கும்.

Also Read: இந்திய இராணுவத்திற்கு குளிர்கால ஆடை.. தயாரிப்பு தொழிற்நுட்பத்தை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கிய DRDO..

அதிகபட்ச புறப்படும் எடை 17,500 கிலோ, பேலோடு 6,500 கிலோ, மணிக்கு 2,385 கிலோமீட்டர், உச்சவரம்பு 56,758 அடி உயரம் ஆகும். மேலும் வானிலிருந்து வான் ஏவுகணையான MICA, ஆஸ்ரம், அஸ்ட்ரா, NG-CCM, Meteor ஆகியவை இருக்கும். வான்வழி ஏவுகணைகளான பிரமோஸ்-NG ALCM,Crystal Maze, Strom Shadow, நிர்பய் மற்றும் ருத்ரம் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையும் ஆகிய ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன.

Also Read: இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க ஆரம்ப நிதியை வெளியிட்டது பிலிப்பைன்ஸ்..

மேலும் லேசர் வழிகாட்டும் வெடிகுண்டு, துல்லியமாக வழிநடத்தும் வெடிகுண்டு, வழிகாட்டப்படாத மற்றும் அலைந்து திரியும் வெடிகுண்டுகளும் பொறுத்தப்பட உள்ளன. இது தவிர மார்க் 1ல் உள்ள குறைபாடுகளை களைந்து 40 மார்க் 1 இரண்டு படைப்பிரிவுகள் மற்றும் 83 மார்க் 1A போர் விமானங்கள் நான்கு படைபிரிவுகளாகவும் விநியோகிக்கப்பட உள்ளன. சோதனை அனைத்தும் முடிக்கப்பட்டு முதல் மார்க் 1A போர் விமானம் 2024 ஆம் ஆண்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Also Read: அதிவேக வான்வழி இலக்கு HEAT அபயாஸ் ட்ரோன் சோதனையை வெற்றிகரமாக நடத்திய DRDO..

Leave a Reply

Your email address will not be published.