“நாங்கள் வென்றுவிட்டோம்” பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியை.. பள்ளியில் இருந்து நீக்கம்..
ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளி ஆசிரியை நபிசா அடாரி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் T20 உலககோப்பை வெற்றியை கொண்டாடியதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இடையே டி20 உலககோப்பை போட்டி நடந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அக்டோபர் 25 ஆம் தேதி உதய்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் நபிசா அடாரி வாட்ஸ் அப் பதிவில் “ஜீத் கயே, நாங்கள் வென்றோம்” என பதிவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படத்தை பகிந்துள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூகவலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த வாட்ஸ் அப் குருப்பில் ஒருவர் நீங்கள் பாகிஸ்தான் ஆதரவாளரா என கேட்டுள்ளார். அதற்கு நபிசா அடாரி ஆம் என பதிவிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் வீரர்களின் புகைபடத்தை பகிர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதை குறிக்கும் எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
இந்த அனைத்து வாட்ஸ் அப் உரையாடலும் சமூகவலைதலங்களில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கும் அவர் தனது வகுப்பில் என்ன கற்பிக்கிறார் என கேள்வி எழுப்பியதை தொடர்ந்து நபிசா அடாரி பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
Also Read: சீனாவுக்கு தடை.. இந்தியாவுக்கு அனுமதி.. இலங்கைக்கு கண்டனம் தெரிவித்த சீனா..
இந்த நிலையில் நபிசா அடாரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் பாகிஸ்தான் ஆதரவாளர் இல்லை எனவும், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது எங்கள் குடும்பத்தினர் இரு அணிகளாக பிரிந்ததாகவும், அப்போது ஒரு அணியில் இருந்த நான் பாகிஸ்தான் ஆதரவாளராக இருந்ததாகவும், அதனாலயே பாகிஸ்தான் வெற்றி பெற்ற உடன் அதனை வாட்ஸ் அப்பில் பகிர்ந்ததாக கூறியுள்ளார்.
Also Read: பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?
மேலும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நபிசா அடாரி, வீடியோவில் தான் ஒரு தேசபக்தர் எனவும், பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். தற்போது இவர் பேசிய வீடியோ மற்றும் இவர் பணி நீக்கம் செய்யப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் நோட்டீஸ் இரண்டுமே சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.
Also Read: பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு..