இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிரான தளமாக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: இலங்கை அதிபர் ராஜபக்சே

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த ஒரு செயலையும் இலங்கையில் இருந்து செயல்பட அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையின் சீனா உடனான உறவு குறித்து பேசப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிற்கு அருகில் கொழும்பு துறைமுகத்தில் சீனா மேற்கொண்டு வரும் திட்டம் குறித்து இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்தியாவின் சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளின் துவக்க விழாவில் ஷ்ரிங்லா கலந்து கொண்டார். இலங்கை அதிபர் ராஜபக்சே உடன் இந்தியா இலங்கை இருதரப்பு உறவு குறித்து பேசப்பட்டது.

இலங்கை சீனாவின் பிடியில் சிக்கி உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக பொருளாதார நிலைமையை சமாளிக்க இலங்கை சீனாவிடம் அதிக அளவு கடன் வாங்கி உள்ளது. மேலும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்திற்கு முக்கிய புள்ளியாக இலங்கை உள்ளது.

கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு இலங்கை சீனாவிடம் வழங்கியுள்ளது. மேலும் கொழும்புவில் சீனா புதிய நகரத்தையும் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவுக்கு எதிராக இலங்கையை எந்த நாடும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அதிபர் உறுதி அளித்துள்ளார்.

Also Read: சீனாவுடன் எல்லையில் பதற்றம்.. இலங்கையுடன் போர் பயிற்சி மேற்கொள்ளும் இந்திய இராணுவம்..

மேலும் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்ற ஷ்ரிங்லா அங்கு இந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். மேலும் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13 வது திருத்தம் குறித்து இலங்கை அதிபரிடம் ஷ்ரிங்லா பேசினார். தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தும் இலங்கை அதிபரிடம் ஷ்ரிங்லா பேச்சுவார்த்தை நடத்தினார்.

Also Read: இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டேன்: ஐநா பொதுச்சபை தலைவர் அப்துல்லா ஷாகித்

இந்திய இலங்கை வர்த்தக உறவுகளை தொடர்வது, கொரோனா தொற்றை சமாளிப்பது, பாதுகாப்பு, தமிழர்களுக்கு அதிகாரமளிப்பது. உத்திரபிரதேசத்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா செல்வது, இலங்கையில் உள்ள இராமாயணம் தொடர்பான இடங்களை மேம்படுத்துவது, துறைமுக வளர்ச்சி பணிகள் போன்றவை குறித்து இலங்கை அதிபரிடம் ஷ்ரிங்லா பேச்சுவார்த்தை நடத்தினார்.

Also Read: இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி.. இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தனிமைபடுத்துதல் கட்டாயம்..

Leave a Reply

Your email address will not be published.