உத்திர பிரதேசத்தில் தனித்து போட்டியிட்டு 403 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: பிரியங்கா காந்தி நம்பிக்கை

2022 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. உத்திர பிரதேசத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் காங்கிரஸ் கட்சி 403 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்று பெறும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு உத்திர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்ராகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் உத்திர பிரதேசத்தில் பிரியங்காவை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் எந்த கட்சி உடனும் கூட்டணி இல்லை என பிரியங்கா காந்தி தெரிவித்தார். மேலும் உன்னாவ் மற்றும் ஹத்ராஸ் வழக்குகளில் காங்கிரஸ் கட்சியை தவிர யாரும் குரல் கொடுக்கவில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் இந்த பிரச்சனை குறித்து சிறிதும் போராடவில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்தார். பாஜகவை கடுமையாக விமர்சித்த பிரியங்கா, பாஜகவிற்கு சுதந்திர இயக்கத்தின் மீது சிறிதும் நம்பிக்கை இல்லை என விமர்சித்தார்.

மகாத்மா காந்தி, ஜவர்ஹலால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் தான் சுதந்திரத்திற்காக போராடினார்கள். காவி கட்சி சுதந்திரத்திற்காக போராடததால் இவர்களுக்கு இதில் நம்ம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.

கடந்த 70 ஆண்டுகளில் பெட்ரோல் விலை 70 ரூபாய்க்கு மேல் உயரவில்லை. ஆனால் பாஜக ஆட்சியில் லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது என விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி வளர்ச்சியை மட்டுமல்லாமல் சகோதரத்துவத்தையும் மேம்படுத்தி உள்ளதாக பிரியங்கா தெரிவித்தார். சமீபத்தில் ஏபிபி மற்றும் சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.