பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் வல்லமை இந்தியாவிற்கும் உண்டு என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம்: ராஜ்நாத்சிங்

லக்னோவில் நடைபெற்ற அகில் பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புத்துறை தலைவர் ராஜ்நாத் சிங், போரில் பங்கேற்ற ஒவ்வொரு இந்திய வீரர்களும் சரித்திரம் படைத்துள்ளனர். அவர்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என கூறினார்.

லக்னோ விழாவில் பேசிய் ராஜ்நாத்சிங், 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போரில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட முடியாது என்பதை உலகிற்கு காட்டினோம். போரின் வெற்றியின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு இந்க செய்தியை அனுப்பினோம். எங்களது வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறோம் என கூறினார்.

மோடி ஆட்சியின் இன்றைய இந்தியா உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மாண்பு உயர்ந்து உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அமெரிக்காவும், இஸ்ரேலும் மட்டுமே பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் நாடுகள் என கூறப்பட்டது.

ஆனால் நிலைமை இப்போது மாறிவிட்டது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றிம் வான்வழி தாக்குதல் மூலம் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் வல்லமை இந்தியாவிற்கு உண்டு என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தி உள்ளோம் என ராஜ்நாத்சிங் கூறினார்.

Also Read: பாலைவனத்தில் போர்கப்பலை மறைத்து வைத்து இரகசியமாக போர்பயிற்சியில் ஈடுபடும் சீனா..

மேலும் 1971 மற்றும் 1999 கார்கில் போரிலும் தோல்வி அடைந்த பாகிஸ்தான், பயங்கரவாதம் உடனான தனது உறவை முறித்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். இனி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டோம் என கூறிய வார்த்தையை பாகிஸ்தான் பின்பற்ற வேண்டும் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Also Read: S-500 அமைப்பை வாங்க தயார்..? ஆனால் இந்தியாவுக்கு விற்க கூடாது.. ரஷ்யாவுக்கு நிபந்தனை விதித்த சீனா..

2014 ஆம் ஆண்டிற்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. நமது அண்டை வீட்டாருக்கு செய்தி அனுப்புவதில் நமது வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சில அரசியல் கட்சிகள் நமது வீரர்களை கேள்விக்கு உட்படுத்த முயல்வது தனக்கு வருத்தமாக உள்ளது. எங்கள் இராணுவ வீரர்களின் கையை கட்டமாட்டோம், அவர்கள் எடுக்கும் முடிவு எதுவாக இருப்பினும் நாங்கள் துணை நிற்போம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Also Read: எதிரிகளின் விமானதளங்களை தாக்கி அளிக்கும் SAAW ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

Leave a Reply

Your email address will not be published.