உள்நாட்டு ஆயுதங்கள் மூலம் நாம் எதிர்கால போர்களில் வெற்றி பெற முடியும்: இராணுவ தளபதி

பாதுகாப்புத்துறையில் உள்ள இந்திய நிறுவனங்களுக்காக நடத்தப்பட்ட DefExpo2022ல் பேசிய இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, உள்நாட்டு ஆயுத அமைப்புகள் மூலம் எதிர்கால போர்களை நாம் முற்றிலும் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி வெல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

எதிர்கால போர்களுக்கு உள்நாட்டு ஆயுதங்களை பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை முப்படை தளபதிகளும் ஆதரித்தனர். உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்கள் இதுவரை செய்துள்ள பணிகளை பாராட்டிய ஜெனரல் மனோஜ் பாண்டே, புத்திசாலித்தனமாக உற்பத்தி செய்யப்படுவது உலக சந்தையில் கிடைப்பதை போலவே சிறந்தது என கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் போர் எங்களுக்கு ஆழமான படிப்பினை அளித்துள்ளது. நீங்கள் தற்சார்புடன் இருக்க வேண்டும் மற்றும் முடிந்தவரை எந்தவொரு உலகளாவிய விநியோக சங்கிலிகளையும் சார்ந்து இருக்க கூடாது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை தலைவ்ர ஏர் சீஃப் மார்ஷல் வீ.ஆர். சௌதாரி கூறுகையில், உள்நாட்டு ஆயுத அமைப்புகளை புகுத்துவது மட்டுமே மோதல் காலங்களில் தற்சார்ப்புடன் இருக்க ஒரே வழி, உள்நாட்டு உற்பத்தி மூலம் அனைத்து ஆயுத அமைப்புகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான ஒரு நீண்ட கால மற்றும் உடனடி திட்டத்தை நாங்கள் பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கடற்படை துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் சதிஷ் குவோர் கூறுகையில், உள்நாட்டு தொழில்துறையால் உற்பத்தி செய்யப்படும் ஆயுத அமைப்புகள் நல்ல முடிவை தருவதாகவும், சேவையில் அவற்றின் திறனை நிருபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பாதுகாப்பு முயற்சியில் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு இந்திய கடற்படை முழு ஆதரவளிப்பதாகவும், அவற்றை சேவையில் செயல்படுத்த 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ராணுவ தளபதி கூறுகையில், மேக்கிங் 2 பிரிவில், இந்திய இராணுவத்திடம் 43 திட்டங்கள் உள்ளன. இதில் சுமார் 187 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவை சுமார் 27,000 கோடி மதிப்புடைய திட்டமாகும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.