பாகிஸ்தானுக்கு ராஜ்நாத்சிங் எச்சரிக்கை.. தீவிரவாதத்தை நிறுத்தவில்லை என்றால் எல்லை தாண்டி தாக்குதல் நடத்த நேரிடும்

டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் தோன்றியது முதலே, எல்லையில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

நம் இராணுவ வீரர்கள் நமது நாட்டிற்குள் இருக்கும் பயங்கரவாதிகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல், தேவை ஏற்பட்டால் எல்லை தாண்டி சென்றும் தீவிரவாத முகாம்களை தாக்கி அழிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அதற்கான எல்லா திறனும் இந்தியாவிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியா தனது சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த செயலிலும் சமரசம் செய்து கொள்ளாது என அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

சீனா எல்லையில் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாக கூறிய அமைச்சர், அதுபோல இந்தியாவும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தி வருவதாகவும் கூறினார்.

இது இந்தியாவின் பாதுகாப்பிற்காகவே தவிர மற்ற நாடுகளை அச்சுருத்துவதற்காக இல்லை என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *