அமெரிக்கா சீனா இடையே போர் வரலாம்: முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவில் தற்போது பலவீனமான மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சி இருப்பதால் அமெரிக்காவை சீனா மதிப்பதில்லை. அமெரிக்காவை மதிக்காததால் சீனாவுடன் அமெரிக்கா போரை நடத்தும் என முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஜோ பிடன் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதால் தற்போது அமெரிக்காவில் பலவீனமான அரசு அமைந்துள்ளது. இதனால் சீனா அமெரிக்காவை மதிப்பதே இல்லை. அமெரிக்காவை மதிக்காத சீனாவுடன் எதிர்காலத்தில் நாம் போரை எதிர்கொள்ளலாம் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

இன்று சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சீன வெளியுறவு கொள்கை ஆலோசகர் யாங் ஜீச்சியுடன் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பல வருடங்களாகவே சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கொரோனா தொற்று பரவியதில் இருந்து இந்த மோதல் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இன்னும் அதிகமானது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியது.

வர்த்தக போர் மட்டுமல்லாமல் தைவான் பிரச்சனை, தென்சீனக்கடல் பிரச்சனை, உய்கூர் முஸ்லிம் பிரச்சனை, கொரோனா தொற்று உருவான விதம் தொடர்பான பிரச்சனை, ஹாங்காங் பிரச்சனை என அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மிகப்பெரிய மோதல் நிலவி வருகிறது.

Also Read: அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்ய உள்ள DRDO.. ஆவேசமடைந்த சீனா, பாகிஸ்தான்..

மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தை ஜோ பிடன் சரியாக கையாளவில்லை என டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். படைகுறைப்பின் போது ஆகஸ்ட் 26 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களும் பலியாகினர். அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தது மட்டுமில்லாமல் 85 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இராணுவ உபகரணங்களை ஆப்கனிலேயே விட்டு சென்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

Also Read: சீனாவுக்கு எதிராக இந்திய இராணுவம் கே-9 வஜ்ரா ஹோவிட்சரை லடாக் எல்லையில் நிறுத்தியுள்ளது.

மேலும் ஆப்கனில் அமெரிக்க இராணுவம் விட்டு சென்ற விலை உயர்ந்த மற்றும் உலகின் சிறந்த புதிய தொழிற்நுட்ப ஆயுதங்களை சீனா மற்றும் ரஷ்யா ஆராய்ந்து அதே போன்ற ஆயுதங்களை தயாரிக்க முடியும் என ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read: பின்னடைவில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்.. திட்டத்தை ரத்து செய்யும் நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.