பிரம்மோஸ், ஆகாஷ் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார்களை வாங்க உள்ள வியட்நாம்..?

இந்தியா-வியட்நாம் இராஜதந்திர உறவுகளை நிறுவி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். மேலும் இந்தியா-வியட்நாம் இடையே பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மூன்று நாள் பயணமாக வியட்நாமுக்கு சென்றுள்ளார். அப்போது வியட்நாம் 10 வருட கூட்டு தொலைநோக்கு அறிக்கையான 2030 ஆம் ஆண்டிற்கான இந்தியா-வியட்நாம் பாதுகாப்பு கூட்டாண்மை குறித்த கூட்டு பார்வை அறிக்கையில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

வியட்நாம் பிரதமர் பான் வான் ஜியாங்களை சந்தித்த ராஜ்நாத்சிங், வியட்நாமுக்கு 500 மில்லியன் டாலர் பாதுகாப்பு கடன் வழங்குவதை முன்கூட்டியே இறுதி செய்ய ஒப்புக்கொண்டார். மேலும் பிலிப்பைன்ஸை தவிர பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வாங்கும் நாடுகளின் பட்டியலில் வியட்நாமும் உள்ளது.

மேலும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கடலோர ரேடார்கள் உள்ளிட்ட பிற உபகரணங்களை வாங்குவது குறித்து இருநாடுகளும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியான் குழுவின் உறுப்பினரான வியட்நாம், தென்சீன கடல் பகுதியில் சீனாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வியட்நாமின் இராணுவ செலவு கிட்டத்தட்ட 600 சதவீதம் உயர்ந்துள்ளது.

சீனாவுடன் மோதல் போக்கு உள்ள நிலையில், இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. தென் சீன கடலில் வியட்நாம் கடல் பரப்பில் இந்தியாவுக்கு எண்ணெய் ஆய்வு திட்டங்களை வியட்நாம் வழங்கியுள்ளது. இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் முன்னிலையில் பரஸ்பர தளவாட ஆதரவு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் ஹாங்கா கப்பல் கட்டும் தளத்தில் இந்தியாவின் 100 மில்லியன் டாலர் உதவியுடன் கட்டப்பட்ட 12 அதிவேக ரோந்து படகுகளை இன்று முறையாக வியட்நாமிடம் ஒப்படைத்தார் ராஜ்நாத்சிங். இந்த திட்டம் மேக் இன் இந்தியா மற்றும் மேக் ஃபார் தி வோர்ல்ட் திட்டத்திற்கு ஒரு எடுத்துகாட்டு என அமைச்சர் கூறினார்.

Also Read: பலுசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்.. 8 பாக். வீரர்கள் உயிரிழப்பு..

வியட்நாம் கடற்படைக்கு வழங்கப்பட்ட 12 அதிவேக ரோந்து படகுகள் இந்தியாவின் 100 மில்லியன் டாலர் கடன் உதவியுடன் கட்டப்பட்டது. இதில் 5 விரைவு படகுகள் இந்தியாவின் லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்தால் இந்தியாவிலும் மற்ற 7 படகுகள் லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்தின் உதவியுடன் வியட்நாமிலும் கட்டப்பட்டது.

Also Read: கம்போடியாவில் ரகசியமாக இராணுவ கடற்படை தளத்தை அமைத்து வரும் சீனா..?

மேலும் இந்தியாவின் 5 மில்லியன் டாலர் மானியத்துடன் வியட்நாமில் உள்ள இராணுவ பயிற்சி நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் இராணுவ மென்பொருள் பூங்காவையும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பார்வையிடுகிறார். வியட்நாம் இதுவரை மற்ற நாடுகளுடன் 3 அல்லது 5 வருடங்களுக்கு மட்டுமே பாதுகாப்பு கூட்டாண்மை கூட்டு பார்வை அறிக்கையில் கையெழுத்திட்ட நிலையில் முதன்முறையாக இந்தியாவுடன் 10 வருட பாதுகாப்பு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் வியட்நாம் கையெழுத்திட்டுள்ளது.

Also Read: டேங்க் கொலையாளியான TB2 ட்ரோனை தனது விமானத்தளத்தில் நிறுத்தியுள்ள பாகிஸ்தான்..

Leave a Reply

Your email address will not be published.