சைவ பிரியர்களை கொரோனா வைரஸ் தாக்காது? ஆய்வில் தகவல்

CSIR என அழைக்கப்படும் அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், 40 நிறுவனங்களில் நடத்திய கொரோனா வைரஸ் பரவல் பற்றிய முடிவை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 10,427 பணியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களது உடலில் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,058 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது;

சைவ உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் புகை பிடிப்போரை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு.

A மற்றும் O பாசிட்டிவ் இரத்த பிரிவினரையும் கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு.

B மற்றும் AB பிரிவு இரத்தம் உள்ளவர்களை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும் பொது போக்குவரத்தில் பயணிப்பவர்கள், பாதுகாப்பு, மற்ற வீடுகளில் வேலை செய்பவர்கள், புகை பிடிக்காதவர்கள், அசைவ உணவு சாப்பிடுவோரை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *