இனப்படுகொலை செய்யும் சீனாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த உய்கூர் முஸ்லிம்கள்..

சீனாவின் உய்கூர் முஸ்லிம் இனத்தை சேர்ந்த 19 பேர் சீன அதிகாரிகளுக்கு எதிராக துருக்கி வழக்கறிஞர்களிடம் கிரிமினல் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில் சீன அதிகாரிகளுக்கு எதிராக கற்பழிப்பு, இனப்படுகொலை, சித்திரவதை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாக கூறியுள்ளனர்.

வழக்கறிஞர் குல்டன் சோன்மேஸ் கூறுகையில், தற்போது சாட்சி அறிக்கைகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் செவ்வாய் அன்று இஸ்தான்புல் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான உய்கூர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினரை சட்டவிரோதமாக முகாம்களில் தடுத்து தடுத்து வைத்துருப்பதாகவும், சீன அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்காததால் இது அவசியம் என வழக்கறிஞர் குல்டன் சோன்மேஸ் கூறினார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே இந்த விசாரணையை தொடங்கியிருக்க வேண்டும், ஆனால் சீனா ஐநா பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக உள்ளதால் இந்த இயக்கத்தில் இது சாத்தியமாக தெரியவில்லை என சோன்மேஸ் தெரிவித்தார். மத்திய ஆசியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய உய்கூர் புலம்பெயர்ந்தோர் துருக்கியில் வசிப்பதாக கூறப்படுகிறது.

Also Read: நைஜீரியாவில் சீனர்களை கடத்தி சென்று சுட்டுக்கொன்ற நைஜீரிய கொள்ளையர்கள்..

இதுபோன்ற முகாம்கள் இருப்பதை முதலில் மறுத்த சீனா, பின்னர் அவற்றை தொழிற்கல்வி மையங்கள் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வடிவமைக்கப்பட்டவை என கூறியது. தற்போது இந்த புகார் குறித்து துருக்கியில் உள்ள சீன தூதரகம் எந்த பதிலும் கூறவில்லை.

Also Read: நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தோனேசிய அரசு.. நெருக்கடியில் சீனா..

புகார் அளிக்கப்பட்ட போது 50க்கும் மேற்பட்டோர் காணமல் போன குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும், சீன அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர் அழைப்பு விடுத்தும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த புகாரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழிலாளர்கள் முகாம்களில் உள்ள சுமார் 116 சீன அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சீனாவுக்கு புதிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் தாலிபானுக்கும் இடையே மோதல்.. எச்சரித்த தாலிபான்கள்..

Leave a Reply

Your email address will not be published.