உய்கூர் முஸ்லிம் இனஅழிப்பு.. சீனா செல்கிறது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்..

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு பிறகு 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையர் சீனாவில் நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை நடத்த சீனா வர உள்ளதாக சவுத் சைனை மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் முஸ்லிம்கள், துருக்கிய முஸ்லிம்கள் மற்றும் திபெத்தியர்கள் மீது சீனா அடக்குமுறையை கையாண்டு வருகிறது.

இந்த உய்கூர் முஸ்லிம்கள் மற்றும் மற்ற பிற முஸ்லிம்கள் மீது சீனா சித்தரவதை, தடுப்புக்காவல், பாலியல் துஷ்பிரயோகம், கட்டாய உழைப்பு மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து குற்றசாட்டுகளையும் சீனா மறுத்துள்ளது. அவர்கள் சீர்திருத்த பள்ளியில் உள்ளதாகவும், மத தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு அதன் கொள்கைகளை விவரித்து வருவதாகவும் கூறியுள்ளது.

இந்த நிலையில் சீனாவின் குற்றசாட்டை ஏற்க மறுத்து குளிர்கால ஒலிம்பிக்கை இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் அறிவித்துள்ளன. இந்த நாடுகளின் அறிவிப்பின்படி குளிர்கால ஒலிம்பிக்கில் அந்த நாடுகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் மாறாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மீறல் மட்டுமல்லாமல் கொரோனா தொற்று பரவல் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட் 2018 ஆம் ஆண்டு முதல் உய்கூர் முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த பிறகு ஐக்கிய நாடுகள் சபை ஆணையர் மிச்செல் பச்லெட்க்கு சீனாவிற்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வருகை ஒரு விசாரணையாக இல்லாமல் நட்பாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சீனா அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.