உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம்.. முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதி..!
உத்தரகாண்டின் 12வது முதலமைச்சராக பதவியேற்க உள்ள புஷ்கர் சிங் தாமி, தேர்தலுக்கு முன் வாக்களித்தப்படி, மாநிலத்தில் சீரான குடியுரிமை சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல் படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.
உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் 70 இடங்களில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தின் முதலைமைச்சர் புஷ்கர் சிங் தாமி, காதிமா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் அங்கு யார் முதலைமைச்சர் என குழப்பம் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தல் புஷ்கர் மீண்டும் முதலைமைச்சராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவை அமைக்கப்பட்ட உடன் சீரான குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க நிபுணர்கள் குழுவை தனது அரசாங்கம் அமல் படுத்தும் என புஷ்கர் கூறினார்.
Also Read: விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல்சோக்சியிடம் இருந்து இதுவரை 19,111 கோடி பறிமுதல்..?
இந்த நிபுணர்கள் குழுவில் நீதித்துறை வல்லுநர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் என முதலைமைச்சர் கூறியுள்ளார். இந்த வரைவை தயாரிப்பதற்கு முன் குழு பலதரப்பட்ட ஆலோசனைகளை நடத்தும் என கூறப்பட்டுள்ளது.
சீரான குடியுரிமை சட்டம் உத்தரகாண்ட் மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதி, விரைவில் அதனை மாநிலத்தில் அமல்படுத்துவோம் என முதல்வர் கூறினார். இதன் மூலம் திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றுக்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை சீரான குடியுரிமை சட்டம் வழங்கும்.
Also Read: ஹரியானாவில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றம்..? 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை..
இந்த சட்டம் சமூக நல்லிணக்கத்தை கொண்டு வருவதோடு, பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வரும். மேலும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் என முதல்வர் கூறியுள்ளார். இந்தியாவில் கோவாவிற்கு அடுத்தபடியாக சீரான குடியுரிமை சட்டத்தை(UCC) கொண்ட இரண்டாவது மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும்.