ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 23 பில்லியன் டாலர் அளவிலான ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா..?

அமெரிக்கா ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 23 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய உள்ளது. இதனை அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருக்கும் போதே வளைகுடா நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இப்போதை அதிபர் ஜோ பிடன் நிற்வாகம் அதனை மறுபரீசிலனை செய்து வருகிறது. இந்த நிலையில் 23.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விற்பனையில் லாக்ஹீட் மார்ட்டின் கார்ப், ஜெனரல் அட்டாமிக்ஸ் மற்றும் ரேதியோன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இதில் 50 F-35 ஃலைட்டர் விமானம், 18 MQ-9B ஆளில்லா விமானம் மற்றும் வானிலிருந்து வான் மற்றும் தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கையெழுத்திட்டுள்ளதால் ஆயுத விற்பனையை எதிர்க்கவில்லை என கூறப்படுகிறது. ஜோ பிடன் நிர்வாகம் பதவி ஏற்ற உடனேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான ஆயுத ஒப்பந்தத்தை இறுதி செய்தது.

இந்த ஆயுதங்கள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்பட்டுவிடும் என கூறப்பட்டுள்ளது. ட்ரம்ப் பதவியில் இருக்கும் போதே இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் உடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது ட்ரம்ப்பின் ஆட்சியில் மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *