ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆதரவு..

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அணுசக்தி சப்ளையர்கள் குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அதிபர் ஜோ பிடன் ஆதகவு தெரிவித்துள்ளார்.

அணுசக்தி சப்ளையர்கள் குழு (NSG) என்பது உலகளவில் அணுசக்தி வர்த்தகத்தை ஒழுங்குப்படுத்தும் அமைப்பாகும். இந்த அமைப்பில் 48:உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஐந்து நாடுகளும் எந்த ஒரு தீர்மானத்தையும் எதிர்க்க அல்லது ரத்து செய்யும் வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலத்திற்கு ஏற்றார்போல மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என இந்தியா உட்பட சில நாடுகள் கூறி வருகின்றன.

அணுசக்தி சப்ளையர்கள் குழுவில் இணைய இந்தியா, பிரேசில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முயன்று வருகின்றன. இருப்பினும் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்தியாவால் நிரந்தர உறுப்பினர் ஆக முடியவில்லை.

அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளை மட்டுமே அணுசக்தி சப்ளையர்கள் குழுவில் அனுமதிக்க வேண்டும் என சீனா கூறிவருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

Also Read: அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்ய உள்ள DRDO.. ஆவேசமடைந்த சீனா, பாகிஸ்தான்..

இந்தியா 2016 ஆம் ஆண்டு NSGயில் இணைய விண்ணப்பித்து இருந்தது. ஆனால் அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் சீனா இந்தியா இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானும் விண்ணப்பித்தது. பாகிஸ்தானின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

Also Read: காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய துருக்கி அதிபர் எர்டோகன்.. பதிலடி கொடுத்த ஜெய்சங்கர்..

இந்த நிலையில் அணுசக்தி சப்ளையர்கள் குழுவில் இந்தியா இணைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பிடன் தெரிவித்தார். காலத்திற்கு ஏற்றார்போல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும் அதிபர் ஜோ பிடன் தெரிவித்தார்.

Also Read: மிராஜ் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் விமானப்படையுடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம்.. புதிதாக 350 போர் விமானங்கள்..

Leave a Reply

Your email address will not be published.