பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்கா திட்டம்..

பசுபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சமீபத்தில், 14 பசுபிக் தீவுகளுடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் அமெரிக்க – பசுபிக் கூட்டாண்மை குறித்த 11-புள்ளி பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு, சமூக உள்ளடக்கம் மற்றும் செழிப்பு ஆகியவை குறித்து வெளியிடப்பட்டது.

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த உச்சி மாநாட்டின் போது, அமெரிக்காவின் பாதுகாப்பு மிகவும் வெளிப்படையாக மற்றும் உலகம் உங்கள் பாதுகாப்பு மற்றும் பசுபிக் தீவுகளின் பாதுகாப்பை பொறுத்தது என அமெரிக்க அதிபர் கூறினார்.

உலகளாவிய சிந்தனை குழுவான RAND கார்ப்பரேஷன் ஆய்வாளரான டெரெக் கிராஸ்மேன் கூறுகையில், பசிபிக் நாடுகள் உடனான உறவுகளை வலுப்படுத்துவதில் அமெரிக்கா அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. சமீபத்திய் உச்சி மாநாடு அமெரிக்கா தனது கண்ணோட்டத்தை மாற்றி கொள்கிறது என்பதை காட்டுகிறது.

சீனர்கள் பிராந்தியத்தில் இராணுவ நிலைப்பாட்டை நிறுவுவதையும், அவர்கள் பசிபிக் பிராந்தியத்தை சிதைப்பதையும் நாங்கள் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் பசிபிக் கூட்டாண்மை வியூகத்தின் கீழ் பசிபிக் தீவு நாடுகளுக்கு சுமார் 810 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அதிபர் பிடன் அறிவித்துள்ளார்.

இந்த நிதி பசிபிக் தீவு நாடுகளில், முதலீடுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, போலிஸ் பயிற்சி, கோவிட் உதவி மற்றும் காலநிலை போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.