பாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க இராணுவ தளம்..? சிக்கலில் இம்ரான்கான்.. நேட்டோ, பாகிஸ்தான் இராணுவம் இடையே பேச்சுவார்த்தை..

அமெரிக்கா பாகிஸ்தானுடன் இராணுவ தொடர்புகளை வைத்திருக்க விரும்புவதாகவும், பாகிஸ்தானிய்ன் உயர்மட்ட இராழுவ அதிகாரிகள் நேட்டோ தலைமையகத்திற்கு வந்து சென்றது, அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும் என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை நேட்டோ பொதுச்செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், பாகிஸ்தான் அதிகாரிகள் நேட்டோ தலைமையகத்திற்கு ஏன் வந்தனர். நேட்டோ மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உறவு என்ன. மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டால் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்வீர்களா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நேட்டோ பொதுச்செயலாளர், பாகிஸ்தானுக்கும் நேட்டோவுக்கு அரசியல் மற்றும் இராணுவ தொடர்புகள் உள்ளன. நேட்டோ பல ஆண்டுகளாக பாகிஸ்தானுடன் வழக்கமான தொடர்புகளை கொண்டுள்ளன. ஆனால் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்கவில்லை என கூறினார்.

மேலும் ஆப்கானிஸ்தானின் நிலைமை நமக்கு கவலை அளிக்கிறது. அங்கு குளிர் காலம் வர உள்ளதால் பலர் கடினமான காலத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை நாங்கள் அறிவோம். நேட்டோ நாடுகள் ஐநா மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் ஆப்கன் மக்களுக்கு உதவி செய்து வருகின்றன என கூறினார்.

ஆனால் இராணுவ வட்டாரங்களில் கூறியதாவது, நேட்டோ பாகிஸ்தானில் ஒரு இராணுவ தளத்தை அமைக்க உள்ளதாக பேசப்படுகிறது. இந்த இராணுவ தளத்தின் மூலம் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா பாகிஸ்தானில் இராணுவ தளத்தை அமைக்க பாகிஸ்தானிடம் கேட்டது.

ஆனால் அமெரிக்க இராணுவ தளத்தை பாகிஸ்தானில் அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துவிட்டார். ஏனெனில் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்கள் பாகிஸ்தான் எல்லையோரம் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துனர். இதற்கு எதிராக பாகிஸ்தான் இராணுவத்தினர் ஆப்கன் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.

Also Read: இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த 3 பாகிஸ்தானியர்கள்.. கைது செய்தது இலங்கை போலிஸ்..

ஆப்கன் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் ஆப்கனில் உள்ள நேட்டோ படைகள் ஆப்கன் இராழுவத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானங்களே ஈடுபடுத்தப்பட்டன. தாக்குதல் முடிவில் 28 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலியாகினர் மற்றும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

Also Read: ஐக்கிய அமீரகத்தில் அந்நாட்டிற்கு தெரியாமலேயே ரகசியமாக கடற்படை தளம் அமைத்து வரும் சீனா.

இதனால் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. பாகிஸ்தான் அரசு பாகிஸ்தானில் உள்ள இராணுவ தளத்தை விட்டு வெளியேறுமாறு அமெரிக்காவிடம் கூறியதால், அமெரிக்காவும் வேறுவழியின்றி பாகிஸ்தானில் உள்ள சம்சி இராணுவ தளத்தை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் ஆப்கனில் தாலிபான் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதால் அங்கு உள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த நேட்டோ பெயரில் அமெரிக்க அதனை பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் நேட்டோ இராணுவதளம் அமைந்தால் அது பாகிஸ்தான் மக்கள் மற்றும் தாலிபான்களுக்கு எதிராக இம்ரான்கான் செயல்பட்டதுபோல் ஆகிவிடும். அமையவில்லை என்றால் அமெரிக்காவிடம் இருந்து நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

Also Read: சீன கடற்பரப்பில் திடீரென மறையும் சீன கப்பல்.. அச்சத்தில் உலக நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.