போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனை சரணடைய கூறும் அமெரிக்கா..?

ரஷ்ய உக்ரைன் போர் 100 வது நாளை எட்டியுள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உக்ரைனை சரணடைய கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் ஆரம்பித்த போது உக்ரைன் ரஷ்யாவை தோற்கடித்து விடும் என உலக நாடுகள் நம்பிக்கொண்டிருந்தன. அதனால் தான் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யப்பட்டது. மேலும் முதலில் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற நினைத்த ரஷ்யா அங்கிருந்து பின்வாங்கியது. இது உக்ரைனுக்கு வெற்றியாக பார்க்கப்பட்டாலும். அதன் கடலோர நகரங்களில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியது.

அதன் கடரோர நகரங்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் சென்றதால், உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் மற்ற அத்தியாவசிய உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் உக்ரைனில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கோதுமை விநியோகமும் தடைப்பட்டது மற்றும் உக்ரைன் வழியாக ரஷ்ய எண்ணெயும் தடை பட்டது.

இதனால் ஐரோப்பிய நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன. உக்ரைனின் கிழக்கு பகுதி முழுவதையும் ரஷ்யா கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டது. அதாவது உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதி இப்போது ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபிடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஒரு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

போரை முடிவுக்கு கொண்டுவர சரணடையுமாறு அமெரிக்க அதிபர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போரில் உக்ரைன் வெற்றிபெற முடியாது என்பதை புரிந்து கொண்ட ஜோபிடன் உக்ரைனை சரணடைய கூறியுள்ளார். எனவே டான்பாஸ், மரியபோல் மற்றும் தெற்கு உக்ரைனின் சில பகுதிகளை உக்ரைன் இழக்க நேரிடும்.

Also Read: ரஷ்ய எண்ணெய்க்கு ஐரோப்பா தடை.. இறக்குமதி செய்யும் அமெரிக்கா..?

போர் ஆரம்பித்த போது உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தனர். பின்னர் நான்சி பெலோசி மற்றும் ஜனநாயக கட்சி தலைவர்களும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் இராணுவத்தை வலுப்படுத்த 40 பில்லியன் டாலர் உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.

ஆனால் தற்போது ரஷ்யா முன்னேறி வருவதால் அமெரிக்கா தனது திட்டத்தில் இருந்து பின்வாங்கி வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவு துறைச்செயலர் அந்தோனி பிளிங்டன் ஆகியோர் இந்த போர் நாம் விரும்பிய முடிவை கொண்டுவரவில்லை என தெரிவித்துள்ளனர்.

Also Read: எண்ணெய் மற்றும் உணவு நெருக்கடி.. ரஷ்யா மீதான தடையை நீக்கும் ஐரோப்பிய யூனியன்..?

மேலும் ரஷ்யா மரியுபோல் நகரத்தை கைப்பற்றியதும் 2,400 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரணடைந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் அமெரிக்க அதிகாரிகள் பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளுடன் போர் நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தனர்.

ஏற்கனவே இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர விருப்பம் தெரிவித்துள்ளன. இதனால் உக்ரைன் ரஷ்ய மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஷ்யா இந்த போரில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. ரஷ்யாவின் நாணயமான ரூபிள் இந்த ஆண்டின் சிறந்த நாணயமாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.