சீன உயிரி தொழிற்நுட்பம் மற்றும் கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.. முற்றும் மோதல்..

சீனாவில் உய்கூர் முஸ்லிம்கள் மற்றும் பிற குழுக்களுக்கு எதிரான மனித உரிமை மீறலில் ஈடுபடுவதால், சீனாவின் பல உயிரியியல் தொழிற்நுட்பம் மற்றும் கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கை அமெரிக்க நிறுவனங்கள் உரிமம் இல்லாத நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை விற்பனை செய்வதை தடுக்கும். சீனாவின் இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் சீன இராணுவத்திற்கு ஆதரவாக உயிரி தொழிற்நுட்பத்தில் கவனம் செலுத்தும் சீனாவின் 11 ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ தனது அறிக்கையில், பயோ டெக்னாலஜி மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள் மனித உயிர்களை காப்பாற்றும். ஆனால் துரதிருஷ்டவசமாக சீன கம்யூனிஸ்ட் அரசு அதன் மக்கள் மீது கட்டுப்பாட்டை தொடர இந்த தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி அடக்குமுறையை கையாண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் சீன அரசு அனைவரிடம் இருந்தும் டிஎன்ஏ மாதிரியை சேகரித்துள்ளது. 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளே சீன கம்யூனிஸ்ட் அரசால் குறிவைக்கப்படுகிறார்கள் என ஜினா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜின்ஜியாங் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்க செனட் சபை தடை விதித்தது. ஏனெனில் அவை கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Also Read: குளிர்கால ஒலிம்பிக் புறக்கணிப்பு.. அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை..

இந்த நிலையில் உய்கூர் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு உயிரியல் தொழிற்நுட்பம் பயன்படுத்தி வருவதால் அத்தகைய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த அடக்கு முறையில் ஈடுபடும் சீன இராணுவத்திற்கு ஆதரவாக செயல்படும் உயிரி நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கின்றன. தற்போது அமெரிக்கா விதித்திருக்கும் தடையால் இனி அந்த உதிரி பாகங்கள் கிடைப்பது சிரமமான ஒன்றாகும். சீனா உய்கூர் மற்றும் திபெத் மக்களுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது.

Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை.. பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு..

உய்கூர் முஸ்லிம்கள் ஜின்ஜியாங்கில் உள்ள சித்ரவதை முகாமில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு கட்டாய கருகலைப்பு, பாலியல் துன்புறுத்தல். ஆண்களுக்கும் கருத்தடை, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குதல் ஆகிய கொடூரங்கள் நடக்கின்றன. மேலும் உய்கூர் முஸ்லிம்கள் சீனாவின் பிற பகுதிகளுக்கு கடத்தப்பட்டு அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து கள்ள சந்தையில் விற்பனை செய்யும் தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள சீனா, பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளது.

Also Read: சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்திற்கு எதிராக களமிறங்ரும் ஐரோப்பிய யூனியன்..

Leave a Reply

Your email address will not be published.