இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா.. அஜித் தோவலுடன் ஆலோசனை..

இந்தியா வந்துள்ள ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலாய் பாட்ருஷேவ், இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் அமெரிக்க உளவுத்துறையான CIAவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் இந்தியா வந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றினர். தாலிபான்கள் ஆப்கனில் ஆட்சி அமைத்துள்ளனர். தாலிபன் தலைவரின் உதவியாளரான முல்லா ஹசன் அகுந்த் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்த்துறை அமைச்சராக சிராஜூதீன் ஹக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். ஹக்கானி அமெரிக்காவால் தேடப்படும் தீவிரவாதி ஆவான். இவனது தலைக்கு அமெரிக்கா 73 கோடி ரூபாய் விலை நிர்ணயித்துள்ளது. மேலும் முல்லா முகமது யாக்கூப், அமீர்கான் முத்தகி ஆகியோகும் அப்கனில் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

இவர்களில் மூன்று பேர் ஐ.நா சபையால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள். இவர்களின் அமைச்சரவைக்கு தான் பாகிஸ்தானும் சீனாவும் ஆதரவு அளித்துள்ளனர். தாலிபான்களுடன் அல்- கொய்தா, ஹக்கானி, ஜெய்ஷி முகமது, ஐஎஸ்ஐஎஸ்ஐ உள்ளிட்ட தீவிரவாத குழுக்கலும் இணைந்துள்ளதால் அவர்கள் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

மேலும் பாகிஸ்தான் தனது இரண்டாவது வீடு எனவும், சீனா ஆப்கனில் முதலீடு செய்ய வேண்டும் எனவும், சீனாவின் பட்டுசாலை திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை ஆலோசகர் நிகோலாய் பாட்ரூஷேவ் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் பாகிஸ்தான் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அஜித் தோவலுடன் சந்திப்பை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்த்துறை அமைச்சர் அமித்ஷா உடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அதே நேரம் அமெரிக்க உளவுத்துறையான CIA வின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஐ.நாவால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் ஆட்சி அமைத்துள்ள நிலையில் அதனை சமாளிப்பது குறித்து இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்திய பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வில்லியம் பர்ன்ஸ் பாகிஸ்தானுக்கு செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.