மகாராஷ்ட்ராவில் யுரேனியம் கைப்பற்றப்பட்ட வழக்கு.. களத்தில் இறங்கிய NIA..

மகாராஷ்ட்ராவில் மே 5 ஆம் தேதி அன்று 21 கோடி மதிப்புள்ள 7.1 கிலோ யுரேனியத்தை மாகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப்படை ஜிகர் ஜெயேஷ் பாண்டியா மற்றும் அபுர் தாஹீர் அப்சல் சவுத்ரி ஆகிய இருவரிடம் இருந்து கைப்பற்றியது.

இந்த இருவரையும் மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிப்புப்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதால் இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உள்ளது.

ஏற்கனவே தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடு அருகே வெடுகுண்டு உடன் ஒரு கார் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் யுரேனியம் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த யுரேனியம் ஏதேனும் சதித்திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டதா? இந்த யுரேனியம் இவர்களுக்கு எப்படி கிடைத்தது, யார் மூலமாக கிடைத்தது என NIA விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புபடை போலிசாரிடம் NIA கேட்டுள்ளது. மேலும் FIR விவரத்தையும் NIA கேட்டுள்ளது. மிகவும் ஆபத்தான இந்த யுரேனியத்தை ஆய்வு செய்வதற்காக பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு NIA அனுப்பி உள்ளது.

தொடர்ந்து மகாராஷ்ட்ராவில் பயங்கரவாத சம்பவம் அதிகரித்து இருப்பது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே அம்பானி வீடு அருகே வெடிகுண்டு கார் கைப்பற்றப்பட்ட வழக்கில் அம்மாநில போலிசாரையே NIA கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *