பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை கைது செய்த உ.பி காவல்துறை..!

2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவுக்கு நிதியுதவி செய்ததாக கோரக்பூரை சேர்ந்த மன்வேந்திர சிங்கை உத்திரபிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) திங்கள் கிழமை கைது செய்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு படையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஜி.கே.கோஸ்வாமி கூறுகையில், மன்வேந்திர சிங் வெவ்வேறு பெயர்கள் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட சிங் அவரது குழுவினருடன் சேர்ந்து 150 க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக கோஸ்வாமி கூறினார்.

பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத நிதி வலையமைப்பை முறியடித்த பின்னர் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் பீகாரின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 பேரை பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்ததாக கோஸ்வாமி கூறியுள்ளார்.

Also Read: MRSAM ஏவுகணை அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

அதன் பிறகு அதே வழக்கிவ் குஷிநகரை சேர்ந்த முஷாரப் அன்சாரி கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 42 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கோஸ்வாமி கூறினார். முஷாரப் அன்சாரியிடம் இருந்து பல கடவுச்சீட்டுகள் மற்றும் ATM கார்டுகளை மீட்டுள்ளோம். அவற்றில் பெரும்பாலனவை மனீஷ் யாதவின் பெயரில் உள்ளது தெரியவந்துள்ளது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட மன்வேந்திர சிங் என்ற மனீஷ் யாதவ் தனது புகைப்படத்தை பயன்படுத்தி போலியான பெயர்களில் பல்வேறு வங்கிகளில் கணக்கு துவங்கியது தெரியவந்துள்ளது. ATM கார்டை முஷாரப் அன்சாரி வைத்திருந்த நிலையில் அந்த வங்கி கணக்குகளுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பணம் வந்துள்ளது.

Also Read: ரஷ்யாவின் அதிநவீன எலக்ட்ரானிக் வார்ஃபேர் அமைப்பை கைப்பற்றிய உக்ரைன்..?

முஷாரப் அந்த பணத்தை எடுத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சில தொகையை அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் போலியான பெயர்களில் வங்கி கணக்குகளை திறக்குமாறு முஷாரப்பை கேட்டுகொண்டுள்ளதாக ஏடிஜி கூறியுள்ளார். மற்ற வங்கி கணக்குகளுக்கு என்பதை அறிந்து பணத்தை மற்றவர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வந்தார். இதற்காக அவர்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் வழங்கப்பட்டதாக ஏடிஜி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.