DefExpo2022ல் மேக் இன் இந்தியா தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ள இங்கிலாந்தின் BAE சிஸ்டம்ஸ்..

இங்கிலாந்தை தளமாக கொண்ட பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனமான BAE சிஸ்டம்ஸ், குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற உள்ள DefExpo2022 ன் 12 வது அறையில் அதன் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களை வரிசை படுத்த உள்ளது.

தன்னம்பிக்கை இந்தியாவுக்காக இணைந்து உருவாக்குதல் என்ற தலைப்பின் கீழ், அதன் பாதுகாப்பு தளவாடங்களை காட்சி படுத்த உள்ளது. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையின் நிர்வாக இயக்குநர் ரவி நிர்குட்கர் கூறுகையில், இந்தியா எங்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் மூலோபாய சந்தை என கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நாங்கள் இந்தியாவின் மேக் இன் இந்தியா முயற்சிக்கான எங்களின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதிலும், நிலம், வான் மற்றும் கடல் ஆகிய துறைகளில் மேம்பட்ட பாதுகாப்பு திறன்களை நிரூபிப்பதிலும் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், BAE சிஸ்டம்ஸின் M777 அல்ட்ரான லைட்வெயிட் ஹோவிட்சர் (ULH) காட்சிபடுத்தப்பட உள்ளது. அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், M777 அல்ட்ரான லைட்வெயிட் ஹோவிட்சர் இந்தியாவின் மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட் மூலம் அசெம்பிள் செய்யப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஹோவிட்சர் இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. BAE சிஸ்டம்ஸ் இதுவரை இந்திய இராணுவத்திற்கு 125 க்கும் மேற்பட்ட ஹோவிட்சர்களை தயாரித்து வழங்கியுள்ளது. மேலும் APKWS லேசர் -வழிகாட்டப்பட்ட ராக்கெட் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மேலும் BAE சிஸ்டமின் கடல்சார் ஆயுதகளான Bofors 40 Mk4 மற்றும் Bofors 57 Mk3 கடற்படை துப்பாக்கிகள் காட்சிப்படுத்தப்பட உளளன. இதுதவிர 3P வெடிமருந்துகள் உட்பட பல பாதுகாப்பு ஆயுதங்களை BAE சிஸ்டம்ஸ் DefExpo2022 ன் 12 வது அறையில் காட்சி படுத்த உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.