அதிபர் ட்ரம்பை தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம்! வன்முறையை ஆதரிக்கவில்லை என ட்ரம்ப் கருத்து

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்களால் நடைபெற்ற வன்முறையை அடுத்து, அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் மனு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பாக பேசிய சபாநாயகர்
நான்சி பெலோஸி, டிரம்பை பதவியில் இருந்து நீக்கவேண்டும், அவர் பதவியில் நீடிப்பது
அமெரிக்க ஜனநாயகத்திற்கே ஆபத்து என கூறினார்.

அதிபர் டொனால்ட் டிரம்பை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 232 ஓட்டுக்களும், எதிராக 197 ஓட்டுக்களும் பதிவாகியுள்ளன. மேலும் ட்ரம்பின் சொந்த கட்சியான குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் 10 பேர், டிரம்பிற்கு எதிராக வாக்களித்து உள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், வன்முறையை தான் எப்போதும் ஆதரிக்கவில்லை என கூறியுள்ளார்.


வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அதிபர் டிரம்ப், தனது ஆதரவாளர்கள் யாரும் போராட்டத்திலோ, வன்முறையிலோ ஈடுபட கூடாது என கூறியுள்ளார். வன்முறையில்
ஈடுபடுபவர்கள் தமது கொள்கைக்கும்
இலட்சியத்துக்கும் எதிரானவர்கள் என ட்ரம்ப்
தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *