சீன எல்லையில் பணியில் இருந்த 2 இராணுவ வீரர்களை 14 நாட்களாக காணவில்லை..

சீன எல்லை பகுதியான அருணாச்சல் பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய இராணுவ வீரர்கள் 14 காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இராணுவம் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.

7வது கர்வால் ரைபிள்ஸ் வீரர்களான ஹரேந்திர நேகி மற்றும் பிரகாஷ் சிங் ராணா ஆகியோர் மே 28 ஆம் தேதி முதல் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வகித்து வரும் காணாமல் போன பிரகாஷ் சிங் ராணாவின் மனைவி மம்தா ராணா செய்தியாளர்களிடம் கூறுகையில், இராணுவ அதிகாரிகள் மே 29 அன்று தன்னை அழைத்து மே 28 அன்று தனது கணவர் காணாமல் போனதாக தெரிவித்தனர்.

பின்னர் ஜூன் 9 ஆம் தேதி அன்று இரண்டாவது தொலைப்பேசி அழைப்பு வந்தது, காணாமல் போன இருவரும் ஆற்றில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது என அவர்கள் என்னிடம் கூறினார்கள் என மம்தா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பிரகாஷ் மம்தா தம்பதியினருக்கு அனுஜ்(10) மற்றும் அனாமிகா (7) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

ஹரேந்திர நேகியின் மனைவி பூனம் நேகி கூறுகையில், இரு இராணுவ வீரர்களும் ஆற்றின் அருகே சென்றது யாருக்கும் தெரியாது என கூறுவது நம்பும்படியாக இல்லை என கூறியுள்ளார். ஹரேந்திர நேகி, பூனம் நேகி தம்பதியினருக்கு திருமணம் ஆகி மூன்று வருடமே ஆன நிலையில், ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது.

Also Read: கம்போடியாவில் ரகசியமாக இராணுவ கடற்படை தளத்தை அமைத்து வரும் சீனா..?

சஹாஸ்பூரின் பாஜக MLA சஹ்தேவ் சிங் பண்டிர், பிரகாஷ் சிங் ராணாவின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட்டிடம் பேசியுள்ளேன். காணாமல் போன வீரர்கள் குறித்த விவரங்கள் மத்திய அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சஹ்தேவ் சிங் கூறியுள்ளார்.

Also Read: ஹனிட்ராப் மூலம் இந்திய இராணுவ ரகசியங்களை திரட்ட 300 இளம்பெண்களை பணியமர்த்திய பாகிஸ்தான் உளவுத்துறை..

Leave a Reply

Your email address will not be published.