ஜம்மு காஷ்மீரில் இரண்டு JeM ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது..

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மற்றும் ஶ்ரீநகர் மாவட்டங்களில் இரண்டு ஹைபிரிட் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி காதிஹாமா குல்காமை சேர்ந்த ஹைபிரிட் பயங்கரவாதியான யாமின் யூசப் பட் எனபவனை குல்காம் காவல்துறை மற்றும் இராணுவம் கைது செய்தனர். இதனை காஷ்மீர் போலிசார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

யாமின் யூசப் பட்டிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி, இரண்டு கைக்குண்டுகள், 51 பிஸ்டல் ரவுண்டுகள், ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஶ்ரீநகரின் நவ்காம் பகுதியில் இருந்து மற்றொரு ஹைபிரிட் பயங்கரவாதியை போலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஷேக் சாஹித் குல்சாரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டு பயங்கரவாதிகள் மீதும் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகள் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்பவர்கள் ஆவார்கள்.

இவர்களுக்கு காஷ்மிர் முழுவதும் பழக்கம் என்பதால் இவர்கள் தான் பயங்கரவாதிகளுக்கு தகவல் அளிப்பவர்கள் ஆவார்கள். தற்போது இந்த இரண்டு பயங்கரவாதிகளையும் போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.