காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய துருக்கி அதிபர் எர்டோகன்.. பதிலடி கொடுத்த ஜெய்சங்கர்..

பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான துருக்கியின் அதிபர் எர்டோகன், நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச்சபை உச்சி மாநாட்டில் ஜம்மூ காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஐநா உச்சி மாநாட்டில் பேசிய எர்டோகன் காஷ்மீரில் 74 வருடங்களாக பிரச்சனை நிலவி வருகிறது. அதனை தீர்க்க முயற்சிக்க வேண்டும் என கூறினார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐநா உச்சி மாநாட்டிலும் ஜம்மு காஷ்மீர் இந்தியா பாகிஸ்தான் இடையேயான சர்ச்சைகுரிய பகுதி என குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது எர்டோகன் கூறிய சில மணி நேரங்களுக்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசிடஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சைப்ரஸ் தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அனைத்து நாடுகளும் கடைபிடிக்கப்படுவது முக்கியம் என மறைமுகமாக துருக்கியை சாடினார்.

1974 ஆம் ஆண்டு துருக்கி படையெடுப்பில் சைப்ரஸ் நாட்டின் பாதி பகுதியை துருக்கி ஆக்கிரமித்தது. ஆக்கிரமித்த துருக்கி பகுதியை எந்த நாடும் அங்கிகரிக்கவில்லை. 2019 ஆம் ஆண்டு காஷ்மீர் பிரச்சனையை எர்டோகன் எழுப்பியபோது, பிரதமர் நரேந்திர மோடி ஆர்மேனிய பிரதமர் நிக்கோல் பஷின்யன் மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசிடஸ் ஆகியோருடன் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

Also Read: 2024ல் மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார்: மேற்குவங்க முன்னாள் முதல்வரின் உறவினர் இரா பாசு..

இது துருக்கிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தற்போது சைப்ரஸ் உடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருநாட்டு உறவு, வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆர்மீனியா மற்றும் சைப்ரஸ் இருநாடுகளுடனும் துருக்கி மோதல் போக்கை கடைபிடிக்கிறது.

Also Read: பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இடையே ஆப்கன் குறித்து பேச்சுவார்த்தை..

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆர்மீனியா மீது துருக்கி படையெடுத்து ஒரு ஆர்மீனிய இனப்படுகொலையை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே 1950 ஆம் ஆண்டு இரு நாடுகளும் நட்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் சன்னி பிரிவை சேர்ந்த நாடுகள் ஆகும். அதனாலையே துருக்கி காஷ்மீர் பிரச்சனையில் மூக்கை நுழைப்பதாக கூறப்படுகிறது.

Also Read: ஏவுகணை தாயாரிக்க பயன்படும் பொருட்களுடன் பாகிஸ்தான் நோக்கி சென்ற சீன கப்பல்.. மடக்கி பிடித்த இந்திய கடலோர காவல்படை..

Leave a Reply

Your email address will not be published.