துருக்கி நாட்டின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்.. ஐ.நா ஒப்புதல்.. புதிய பெயர் என்ன தெரியுமா..?

துருக்கி நாட்டின் பெயரை மாற்றுவதற்கான துருக்கியின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை, துருக்கியின் பெயரை “துருக்கியே” என மாற்றியுள்ளது.

துருக்கியின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை ஏற்றுக்கொண்டதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். துருக்கி (Turkey) இனி துருக்கியே (Turkiye) என அழைக்கப்படும்.

துருக்கியின் பெயரை மாற்றுவதற்கான துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லுவிடமிருந்து கோரிக்கை கடிதத்தை உலக அமைப்பு ஐநா தலைவருக்கு அனுப்பிய நேரத்தில் இருந்து இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்ததாக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு துருக்கி ஐனாதிபதி எர்டோகன் ஒரு குறிப்பாணையை வெளியிட்டு, ஒவ்வொரு மொழியிலும் நாட்டை விவரிக்க துருக்கியேவை பயன்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து டிசம்பர் மாதம் முதல் தனது நாட்டு பெயரை துருக்கியே என மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

Also Read: இந்தியா சுதந்திரமாக உள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம்: இம்ரான்கான்

துருக்கிய மக்களின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளின் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் வெளிபாடு துருக்கியே என கூறியுள்ளார். மேலும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு மேட் இன் துருக்கியே பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும் அரசு நிறுவனங்களும் துருக்கியே (Turkiye) பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

Also Read: காதலனை திருமணம் செய்ய ஆற்றில் நீந்தி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச பெண்..

Leave a Reply

Your email address will not be published.