இந்திய கோதுமையை நிராகரித்த துருக்கி.. இந்தியா திரும்பும் கோதுமை கப்பல்..

இந்திய கோதுமையில் ரூபெல்லா வைரஸ் கண்டறியப்பட்டதால் பைட்டோசானிட்டரி தொடர்பான பிரச்சனையால் இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்துள்ளது. இதனையடுத்து கோதுமை ஏற்றப்பட்ட கப்பல் இந்தியா திரும்பும் என கூறப்பட்டுள்ளது.

துருக்கி வர்த்தகர்கள் கூறுகையில், இந்திய கோதுமையில் ரூபெல்லா வைரஸ் கண்டறியப்பட்டதால் அதனை துருக்கி விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை அடுத்து 56,877 மில்லியன் டன் கோதுமை துருக்கியில் உள்ள இஸ்கெண்டருன் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் காண்ட்லா துறைமுகத்திற்கு திரும்பியுள்ளது.

அடுத்த மாத நடுப்பகுதியில் கோதுமை ஏற்றப்பட்ட கப்பல் இந்தியா திரும்பும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கோதுமை நிராகரிக்கப்பட்டது தொடர்பாக துருக்கி விவசாய அமைச்சகம் பதிலளிக்கவில்லை. உக்ரைன், ரஷ்ய மோதல் மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் உலக அளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், துருக்கி இந்திய கோதுமையை நிராகரித்துள்ளது.

துருக்கியின் இந்த முடிவு, அடுத்த நில நாட்களில் எகிப்து உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் நிலை குறித்து இந்திய ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். துருக்கிக்கு அனுப்பப்பட்ட கோதுமையில் சில பைட்டோசானிட்டரி தொடர்பான பிரச்சனைகள் இருந்ததால் நிராகரிக்கப்பட்டதாக மும்பையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Also Read: பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்ய இந்தியா ரஷ்யா இடையே ஒப்புதல்..?

உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், மே 13 அன்று கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஏற்றுமதியை தடை செய்யும் போது இந்தியா கடன் கடிதங்களுடன் ஒப்பந்தங்களுக்கு விலக்கு அளித்தது மற்றும் சில கப்பல்களை குறிப்பிட்ட இடைவெளியில் அனுப்ப அனுமதித்தது.

Also Read: கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: IMF

உக்ரைன் மற்றும் ரஷ்ய மோதலால் உலக கோதுமை சந்தையை பிடிக்க இந்தியா முயன்று வருகிறது. விரைவில் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் துருக்கியின் இந்த நடவடிக்கை கோதுமை ஏற்றுமதியில் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: முடிவுக்கு வரும் அமெரிக்காவின் டாலர்.. வளர்ந்து வரும் ரஷ்யாவின் ரூபிள்..

Leave a Reply

Your email address will not be published.