ஆப்கன் எல்லை அருகே TTP தாக்குதல்.. 5 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு…

பாகிஸ்தான் இராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தாலிகான் பாகிஸ்தான் (TTP) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஞாயிற்றுகிழமை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் குர்ரம் மாவட்டத்தில் உள்ள எல்லை சாவடியை குறிவைத்து ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 5 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பதிலுக்கு பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பயங்கரவாத குழுக்கள் நாட்டில் இருந்து செயல்பட அனுமதிக்கப்படாது என தாலிபான்கள் உறுதி அளித்தனர்.

இதேபோன்று ஏற்கனவே TTP பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் 10,000 க்கும் மேற்பட்ட TTP அமைப்பினர் தங்கள் மீது உள்ள தடையை நீக்ககோரி பாகிஸ்தானில் போராட்டம் நடத்தியதால் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் TTP அமைப்பினருக்கும் இடையே ஒரு மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது.

Also Read: போர் இனிமேல்தான் ஆரம்பம்.. தாலிபானை எச்சரித்த ISIS-K பயங்கரவாத அமைப்பு..

கடந்த ஆண்டு டிசம்பருடன் ஒப்பந்தம் காலாவதியானதால் TTP அமைப்பினர் மீண்டும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த தாக்குதலில் 6 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக TTP தெரிவித்தது. ஆனால் 5 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

Also Read: பலூசிஸ்தானில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் 100 பாகிஸ்தான் வீரர்கள் பலி..?

இதேபோன்று கடந்த வாரம் பலுசிஸ்தானில் பலூச் விடுதலை இராணுவம் நடத்திய தாக்குதலில் 100 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் இராணுவம் 20 பயங்கரவாதிகள் மற்றும் 9 பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக கூறியது.

Leave a Reply

Your email address will not be published.