இந்தியாவில் அமைகிறது TSMC நிறுவனத்தின் சிப் உற்பத்தி ஆலை..? தைவானுடன் பேச்சுவார்த்தை..

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக இந்தியா தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் தைவானின் TSMC அல்லது UMC நிறுவனத்தின் இரண்டாவது வெளிநாட்டு உற்பத்தி ஆலை இந்தியாவில் அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

செல்போன்கள் முதல் கார்கள் வைரையிலான தயாரிப்புகளுக்கு தேவையான சிப்களுக்கு அதிக அளவில் பற்றாக்குறை இருப்பதால் அதனை இந்தியாவில் தயாரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவும் தைவானும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியாவில் சிப் உற்பத்தி மையங்களை உருவாக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

உலகின் மிகப்பெரிய செமிக்கண்டக்டர் நிறுவனங்களில் இரண்டு தைவானில் உள்ளன. அவை தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (TSMC) மற்றும் யுனைடெட் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (UMC) ஆகும். இந்த இரண்டு நிறுவனத்தில் ஏதேனும் ஒரு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக இந்திய தரப்பில் பல இடங்களை முன்மொழியப்பட்டன. இந்த நிலையில் இந்தியாவும் தைவானும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு குழுக்களை அமைத்துள்ளன. இந்த நான்கு குழுக்களும் செமிகண்டக்டர் உற்பத்தி மையம், தொழிற்துறைக்கு தேவையான மனிதர்களுக்கு சிறப்பு வாய்ந்த கல்வி மற்றும் பயிற்சி, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இந்த ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இருப்பினும் இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைப்பது மிகவும் சிக்கலான ஒன்று என கூறப்படுகிறது. ஏனெனில் TSMC போன்ற நிறுவனம் நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களின் உதிரிபாகங்களை பயன்படுத்துகிறது. இந்தியாவில் இந்த உதிரிபாகங்களை கிடைக்கும் வகையில் உறுதி படுத்தினால் மட்டுமே ஆலை அமைப்பது சாத்தியம் என கூறப்படுகிறது.

Also Read: இந்தியா RCEP வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான நடவடிக்கை என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் பாராட்டு..

TMSC நிறுவனம் உலக அளவில் 550 பில்லியன் அமெரிக்க டாலரை விட அதிக சந்தை மதிப்பை கொண்டுள்ளது. உலகளாவில் செமிகண்டக்டர் வருவாயில் 54 சதவீதத்தை கொண்டுள்ளது. அமெரிக்காவில் அதன் முதல் வெளிநாட்டு ஆலையை அமைக்க 12 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டதை வெளியிட்டது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டால் அதன் இரண்டாவது ஆலை இந்தியாவில் அமையும்.

Also Read: இந்தியாவில் 76,000 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே உற்பத்தி PLI திட்டத்திற்கு ஒப்புதல்..

மத்திய அமைச்சரவை டிசம்பர் 15 அன்று செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்பிளே உற்பத்தி அமைப்பை மேம்படுத்துவதற்காக 76,000 கோடி மதிப்பிலான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்க திட்டத்திற்கு (PLI) ஒப்புதல் அளித்தது. மேலும் மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்க 2.3 லட்சம் கோடி ஊக்கத்தொகையும் அரசு வழங்கும் என கூறப்படுகிறது. உலக அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கில் இந்த ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சீனாவிற்கு எதிராக $490 பில்லியன் மதிப்பில் ஜப்பானில் சிப் உற்பத்தி தொழிற்சாலை.. இந்தியாவில் அமைக்கவும் பேச்சுவார்த்தை..

Leave a Reply

Your email address will not be published.