முற்றும் மோதல்.. ட்விட்டர், பேஸ்புக்கிற்கு போட்டியாக $1.7B மதிப்பில் புதிய செயலியை உருவாக்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப்..
முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போது புதிய சமூகவலைதளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் ட்ரம்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கியது. இதனை தொடர்ந்து தற்போது ட்ரம்ப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் தோற்றதால் அவரது ஆதரவாளர்கள் ஜனவரி 6 அன்று அமெரிக்காவின் கேப்பிட்டல் கட்டிடத்தில் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் பலியாகினார். இதனால் ட்ரம்பின் கணக்கை தற்காலிகமாக முடக்கி வைத்திருந்த சமூகவலைத்தள நிறுவனங்கள் நிரந்தரமாக முடக்கின.
பேஸ்புக் மட்டும் இரண்டு வருட காலத்திற்கு முடக்கி வைத்துள்ளது. இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் “ட்ரூத் சோஷியல்” என்ற சமூகவலைதளத்தை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான ட்ரம்ப் மீடியா & டெக்னாலஜி குழுமம்(TMTG) உருவாக்கியுள்ளது.
இதன் வெளியீட்டு விழா விரைவில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. மேலும் TMTG நிறுவனம் சந்தா வீடியோ ஆன்-டிமான்ட் சேவையை அறிமுகபடுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் “டீல் ஆர் நோ டீல், காட் டேலண்ட் போன்ற பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப படும் என கூறப்பட்டுள்ளது. ட்ரம்ப் தனது அறிக்கையில் கூறும்போது, ட்விட்டரில் பயங்கரவாதிகள் என தடைசெய்யப்பட்ட பல தாலிபான்கள் இருக்கும் போது தன்னை மட்டும் தடை செய்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கூறியுள்ளார்.
இந்த TMTG நிறுவனத்தை பங்குசந்தையிலும் பட்டியலிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தின் மதிப்பு 875 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. மேலும் இதில் 825 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளன. இதனால் இதன் மொத்த மதிப்பு 1.7 பில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
Also Read: சீனாவுக்கு எதிராக சோலார் பேட்டரி சந்தையில் களமிறங்க உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்..
இந்த நிறுவனம் சந்தைக்கு வரும்போது டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்திக்கும் என கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தல் வர உள்ள நிலையில் தற்போது ட்ரம்ப் அதற்கு தயாராகி வருகிறார். ட்ரம்ப் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடுத்துள்ளார்.
Also Read: OTT, கிரிப்டோ கரன்சி மற்றும் மொபைல் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்: RSS தலைவர் மோகன் பகவத்
ஏற்கனவே நைஜிரியா அதிபரின் ட்வீட் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி ட்விட்டர் நிறுவனம் நைஜீரியா அதிபரின் ட்வீட்டுகளை நீக்கி இருந்தது. இதற்கு பதிலடியாக ட்விட்டரையே தடை செய்து நைஜிரியா அரசு உத்தரவிட்டது. அதற்கு பதிலாக இந்தியாவின் கூ செயலிக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.