உலகின் முதல் 100 ஆயுத தயாரிப்பு நிறுவனங்களில் இடம் பிடித்த 3 இந்திய நிறுவனங்கள்..

ஆயுதங்கள், இராணுவ விமானங்கள் உட்பட இராணுவ தளவாடங்களை தயாரிக்கும் முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் மூன்று இந்திய இராணுவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

ஸ்வீடிஷ் சிந்தனை குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI), ‘சிறந்த 100 ஆயுத உற்பத்தி மற்றும் இராணுவ சேவை நிறுவனங்கள் 2020’ என்ற தலைப்பில் அதன் ஆய்வரிக்கைகளை ளெளியிட்டுள்ளது. இந்த 100 தரவரிசையில் மூன்று இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக உலகம் முழுவதும் முழு ஊரடங்கு இருந்த போதிலும் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனம் 1.5 சதவீத வளர்ச்சியுடன் 42வது இடத்திலும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் 4 சதவீத வளர்ச்சியுடன் 66வது இடத்திலும், இந்திய ஆயுத தொழிற்சாலை (IOF) 0.2 சதவீத வளர்ச்சியுடன் 60வது இடத்திலும் உள்ளன.

இந்த மூன்று நிறுவனங்களின் மொத்த ஆயுத விற்பனை 6.5 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் 48,750 கோடி ஆகும். 2019 ஆம் ஆண்டை விட இது 1.7 சதவீதம் அதிகமாகும். 100 தரவரிசையின் மொத்த விற்பனையில் 1.2 சதவீதம் ஆகும். கொரோனா தொற்று இருந்தபோதிலும் உள்நாட்டு விற்பனை மூலம் நிறுவனங்கள் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்த 100க்கும் மேற்பட்ட இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.

இந்த 100 தரவரிசை பட்டியலில் 41 நிறுவனங்களுடன் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மொத்த ஆயுத விற்பனை 285 பில்லியன் அமெரிக்க டாலர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 100 தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களை அமெரிக்க நிறுவனங்களே இடம் பெற்றுள்ளன.

இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. இந்த 100 தரவரிசை பட்டியலில் 5 சீன நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 5 நிறுவனங்களின் மொத்த ஆயுத விற்பனை 66.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது கடந்த ஆண்டைவிட 1.5 சதவீதம் அதிகம். 100 நிறுவனங்களின் மொத்த விற்பனையில் சீனாவின் பங்கு 13 சதவீதம் ஆகும். இந்த ஐந்து சீன நிறுவனங்களும் முதல் 20 இடங்களில் உள்ளன. இந்த 5 நிறுவனங்களும் சீன அரசுக்கு சொந்தமானவை.

Also Read: இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழிக்க சீனா போட்ட திட்டம்..

ரஷ்யாவின் ஆயுத விற்பனை 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஆயுத விற்பனை 26.4 பில்லியன் அமெரிக்க டாலர். இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் குறைவாகும். இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க விதித்திருக்கும் தடை என கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் துருக்கி நிறுவனம் ஒன்று இடம் பிடித்துள்ளது. துருக்கியின் அசெல்சன் நிறுவனம் 51வது இடத்தில் உள்ளது. 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் ஆயுத விற்பனையுடன் முதல் 100 தரவரிசை பட்டியலில் நுழைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டு 12 சதவீதம் ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியாவின் இந்த மூன்று நிறுவனங்களும் முதல் 100 தரவரிசை பட்டியலில் இடம்பிடித்ததற்கு மோடி அரசின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டமே காரணம். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராணுவ ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 25 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்தது.

Also Read: பாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க இராணுவ தளம்..? சிக்கலில் இம்ரான்கான்.. நேட்டோ, பாகிஸ்தான் இராணுவம் இடையே பேச்சுவார்த்தை..

Also Read: J-20 விமானத்தில் பழைய எஞ்சினை வைத்து கொண்டு ஐந்தாம் தலைமுறை விமானம் என கூறும் சீனா..

Leave a Reply

Your email address will not be published.