பக்ரீத் நேரத்தில் மின்வெட்டு இருக்க கூடாது.. மின்துறை அதிகாரிகளை எச்சரித்த சமாஜ்வாதி MP..

சம்பா மாவட்டத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷபிகுர் ரஹ்மான் பர்க், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மின்வெட்டு இருக்ககூடாது என மின்சாரத்துறை அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.

ஷபிகுர் ரஹ்மான் பர்க் கூறுகையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மின்வெட்டு என்ற பெயரில் முறைகேடு செய்ய கூடாது என்றும், அவ்வாறு செய்தால் அதன் விளைவுகள் நன்றாக இருக்காது எனவும் அதிகாரிகளை எச்சரித்துள்ளார். மின்சாரத்துறை அதிகாரிகள் ஊழல் செய்வதாகவும், சோதனை என்ற பெயரில் மக்களை துன்புறுத்தி பணம் சம்பாதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

12 மாதங்கள் மற்றும் 24 மணி நேரமும் மின் சோதனை செய்யக்கூடாது, தினசரி சோதனை செய்து தொல்லை கொடுப்பது அதிகாரிகளுக்கு பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாகும். இதற்கும் அரசாங்கத்திற்கும் அல்லது நிலைமையை மேம்படுத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

தற்போது பக்ரீத் வருகிறது, பக்ரீத்தின் போது தேவையற்ற சோதனை அல்லது தொந்தரவு இருக்க கூடாது. அவ்வாறு சோதனை செய்யப்பட்டால் நன்றாக இருக்காது. பக்ரீத் ஒரு முக்கியமான நேரம், எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். சம்பல் நகரத்தின் அமைதி போக நான் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

பக்ரீத், கன்வர் யாத்திரை மற்றும் வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை பண்டிகை நாட்களில் பின்பற்ற வேண்டிய சட்ட ஒழுங்கு குறித்து அதிகாரிகள் இடையே கூட்டத்தை நடத்தினார். பண்டிகை நாட்களில் மேற்கொள்ளப்பட்ட காவல்துறை ஏற்பாடுகள் குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாநிலத்தில் பாதுகாப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிபடுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறும், மற்ற மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் அதிகாரிகளை கேட்டு கொண்டுள்ளார். மேலும் சமூக விரோதிகள் சுற்றுச்சூழலை கெடுக்க முயற்சிப்பார்கள் என எச்சரித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகை இந்த மாதம் 10 தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து 14 ஆம் தேதி கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொள்வார்கள், அதனை தொடர்ந்து முஹர்ரம் மாதம் தொடங்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.