இந்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு..

அதிகரித்து வரும் பணவீக்கம், விநியோக சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் 2022-23 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை முந்தைய 8 சதவீத மதிப்பீட்டில் இருந்து 7.5 சதவீதமாக உலக வங்கி குறைத்துள்ளது.

நடப்பு 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை உலக வங்கி திருத்துவது இது இரண்டாவது முறையாகும். ஏப்ரல் மாதத்தில் உலக வங்கி இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை 8.7 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத்தது. இந்த நிலையில் தற்போது 8 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைதுள்ளது.

தனியார் துறை மற்றும் வணிக சூழலை மேம்படுத்துவதற்கான ஊக்கத்தொகைகள் மற்றும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நிலையான முதலிட்டின் மூலமும் வளர்ச்சி ஆதரிக்கப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த நிதியாண்டில் 2023-24 ல் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.

Also Read: பாகிஸ்தானில் நெருக்கடி: வாரத்தில் 5 நாள் வேலை, 6 மணிக்கு மேல் கடைகளை மூட உத்தரவு..?

கோவிட் பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தாக்கத்தில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டாலும், உக்ரைனில் நடந்த போர் மற்றொரு அடியை கொடுத்துள்ளது. இதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் விலைகளின் தாக்கம் காரணமாக ரிசர்வ் வங்கி தனது ஜிடிபி வளர்ச்சியை 2022-23 ஆம் நிதியாண்டிற்கான முந்தயை 7.5 சதவீத மதிப்பீட்டில் இருந்து 7.2 சதவீதமாக குறைத்துள்ளது.

Also Read: $10 பில்லியனுக்கு கிழே குறைந்த பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு.. கடன் வழங்குமா IMF..?

Leave a Reply

Your email address will not be published.