பாகிஸ்தானுக்கு கடன் வழங்க முன்வந்துள்ள உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம்..

கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உலக வங்கி 1.33 மில்லியன் டாலர் கடன் வழங்க முன்வந்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதால் FATF பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது. இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான பரிசீலனையை ஏற்று கொண்டுள்ளது. இதனால் IMF 500 மில்லியன் டாலர் கடன் வழங்க சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பல குடும்பங்கள், தொழிற்சாலைகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதற்காகவும், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பாகிஸ்தான் அரசின் முயற்சிகளுக்கு கடன் வழங்க உலக வங்கி ஒப்புகொண்டது.

இதன் அடிப்படையில் 128 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பாகிஸ்தான் சார்பில் நூர் அகமது மற்றும் நான்கு மாகாண பிரதிநிதிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உலக வங்கி சார்பில் அதன் இயக்குநர் நஜி பென்ஹசின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்த பாகிஸ்தான் கொரோனா தொற்றால் அதன் பொருளாதாரம் மேலும் சுருங்கியது. இந்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு உலக வங்கி கடன் வழங்க முன்வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *