ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த பெண்! காதலன் அடித்து கொலை

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் (Lakhimpur Kheri) ஹர்பால் என்பவர் காதலியின் இரண்டாவது காதலனான சர்ஜீத் குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து ஹர்பால் மற்றும் அவரது காதலியையும் கைது செய்துள்ளனர்.

சர்ஜித் காணாமல் போன 2 நாட்களுக்கு பிறகு அவரது உடல் காதலியின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

சர்ஜித் குமார் ஜனவரி 6 முதல் காணாமல் போன நிலையில் அவரது உடல் வெள்ளிக்கிழமை சுனாசி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. கிராமவாசிகள் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், காவல்துறையினர் IPC 302 ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையின் போது, ​​சர்ஜீத்தின் மொபைல் எண்ணை வைத்து அவரது காதலியை கைது செய்தனர். இதன்பின் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த பிறகு, சர்ஜீத் மற்றும் ஹர்பலுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், ஹர்பலுக்கும் சர்ஜீத்துக்கும் ஒருவருக்கொருவர் யார் என்றே தெரியாது.

ஜனவரி 6 அன்று ஹர்பால் காதலியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது காதலி சுஜித்துடன் தனிமையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹர்பால், சர்ஜித்தை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக அந்த பெண் போலிசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் உடலை மறைப்பதற்கு ஹர்பாலுக்கு உதவியதாகவும் அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *